திருவாரூர்: பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிச் சென்ற பள்ளி மாணவர்கள்

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
திருவாரூர்: பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிச் சென்ற பள்ளி மாணவர்கள்
Updated on
1 min read

திருவாரூர்: புத்​தகத் திரு​விழாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்​களை ஏற்றி வந்த அரசுப் பேருந்து சாலை​யில் பழு​தாகி நின்​ற​தால், திரு​வாரூரில் மாணவர்கள் பேருந்தை தள்​ளிச் சென்ற வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கிறது.

திரு​வாரூர் மாவட்ட 4-வது புத்​தகத் திரு​விழா பவித்​திர​மாணிக்​கம் பகு​தி​யில் உள்ள தனி​யார் திருமண மண்​டபத்​தில் கடந்த 8-ம் தேதி முதல் நடை​பெற்று வரு​கிறது.

வரும் 17-ம் தேதி வரை நடை​பெற உள்ள இந்த புத்​தகத் திரு​விழாவுக்​கு, மாவட்​டம் முழு​வதும் உள்ள அரசுப் பள்ளி மற்​றும் அரசு உதவி​பெறும் பள்ளி மாணவ, மாணவி​கள் சென்று பார்​வை​யிட்டு வரு​கின்​றனர்.

இதற்​காக மாவட்ட நிர்​வாகம் சார்​பில் அரசுப் பேருந்து ஏற்​பாடு செய்​யப்​பட்​டு, மாணவ, மாணவி​கள் புத்​தகத் திரு​விழாவுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பின்​னர் மீண்​டும் பள்​ளி​களில் கொண்டு சென்று விடப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், புத்​தகத் திரு​விழாவுக்கு கடந்த 9-ம் தேதி அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்​தில் வந்து புத்​தகக் காட்​சி​யைப் பார்த்​து​விட்டு திரும்​பச் சென்​ற​போது, அரசுப் பேருந்து சிறிது தூரத்​தில் பவித்​திர ​மாணிக்​கம் பகு​தி​யில் பழு​தாகி சாலை​யோரத்​தில் நின்​றுள்​ளது.

இதையடுத்​து, பள்ளி மாணவர்கள் அந்​தப் பேருந்தை சிறிது தூரம் தள்​ளிச் சென்​றும் பேருந்து ஸ்டார்ட் ஆகாத​தால், சாலை​யோரத்​தில் நிறுத்​தப்​பட்​டது. இதற்​கிடை​யில், அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை தள்​ளிச் செல்​லும் வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கிறது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்​சி​யர் மோக​னசந்​திரன், புத்​தகத் திரு​விழாவுக்கு அனுப்​பும் பேருந்​துகளை முழு​மை​யாக ஆய்வு செய்​த பின்​னரே அனுப்ப வேண்​டும் என்று போக்​கு​வரத்​துத் துறைக்கு உத்தர​விட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

திருவாரூர்: பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிச் சென்ற பள்ளி மாணவர்கள்
சாதி பெயர்களை நீக்கும் அரசாணையில் குறைபாடு: உயர் நீதிமன்றம் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in