பழநி நில விவகாரத்தில் பத்​திர பதிவை ரத்து செய்த உத்தரவுக்கு தடை​ விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
2 min read

புதுடெல்லி: பழநி அருள்​மிகு தண்​டா​யுத​பாணி சுவாமிகள் மடத்​திற்​குச் சொந்​த​மான இடத்​தின் பத்​திரப்​ப​திவை ரத்து செய்த சென்னை உயர்​ நீ​தி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக நிலத்தை வாங்​கிய​வர்​கள் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு மனுவை முடித்து வைத்​து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

பழநி அருள்​மிகு தண்​டா​யுத​பாணி சுவாமிகள் மடத்​திற்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள இடத்​தின் பத்​திரப் பதிவுக்கு அனு​மதி வழங்கி கடந்த ஏப்​ரல் மாதம் சென்னை உயர் ​நீ​தி​மன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக அக்​கோ​யில் செயல் அலு​வலர் சென்னை உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில், ‘சம்​பந்​தப்​பட்ட நிலம் தொடர்​பாக ஏற்​கெனவே உரிமை​யியல் வழக்கு தொடரப்​பட்​டுள்ள நிலை​யில் வழக்​கில் கோயி​லின் தக்​காரை சேர்க்​காமல் தனி நீதிபதி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். மடத்​தின் சொத்​துகள் தொடர்​பான நிர்​வாக அதி​காரம் தக்​காரிடமே உள்ள நிலை​யில் தனி நீதிபதி உத்​தர​விட்​டது சட்​ட​விரோத​மானது. எனவே பழநி தண்​டா​யுத​பாணி சுவாமிகள் மட நிலத்தை பத்​திரப் பதிவு செய்ய அனு​மதி வழங்கி தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை டிவிஷன் அமர்​வு, நிலத்தை பதிவு செய்​வதற்கு முன்பு கோயில் நிர்​வாகத்​துக்கு நோட்​டீஸ் அனுப்பி கருத்து கேட்​டிருக்க வேண்​டும். அதன் பின்​னரே பத்​திர பதிவுக்கு அனு​மதி கோரி​யிருக்க வேண்​டும், சொத்து தொடர்​பாக வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தா? என்​பதை சார் பதி​வாளர் தரப்​பில் தனி நீதிப​தி​யிடம் தெரி​வித்து இருக்க வேண்​டும்.

இவற்றை மேற்​கொள்​ளாமல் உண்​மையை மறைத்து தனி நீதிப​தி​யிடம் உத்​தரவு பெறப்​பட்​டுள்​ளது, மேலும் கோயில் நிர்​வாகத்​துக்கு தகவல் அளிக்​காமல், நோட்​டீஸ் அனுப்பி கருத்து கேட்​காமல் சார் பதி​வாளர் பத்​திரப் பதிவு செய்​துள்​ளார்.

இதனால் இந்த பத்​திரப்​ப​திவு செல்​லாது என்​றும், முழு​மை​யான தகவல்​களை​யும் தெரிவிக்​காமல் தனி நீதிப​தியை தவறாக வழிநடத்​தி​யுள்​ளனர். எனவே தனி நீதிப​தி​யின் உத்​தரவு ரத்து செய்​யப்​படு​வதோடு, உத்​தர​வின் அடிப்​படை​யில் பழநி சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் நடை​பெற்ற பத்​திரப்​ப​திவு செல்​லாது என உயர்​நீ​தி​மன்ற மதுரை டிவிஷன் அமர்வு உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்​து, நிலத்தை வாங்​கிய சேதுபதி மற்​றும் வெள்​ளத்​துரை சார்​பில் உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. அந்த மேல்​முறை​யீட்டு மனு உச்​ச நீ​தி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், சம்பந்​தப்​பட்ட நிலம் கோயில் சொத்து தானே, அப்​படி இருக்​கும்​போது எவ்​வாறு பத்​திர பதிவு செய்ய முடி​யும் என கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர்​கள் தரப்பு மூத்த வழக்​கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, இது பல தலை​முறை​களாக தனி​யார் பராமரப்​பில் உள்​ள​தாக​வும், பழநி கோயிலுக்கு சொந்​த​மான நிலம் அல்ல என்​றும் ஒரு தனி​யார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான நிலம் எனவும் மேலும் ஒரு தனி நபரிட​மிருந்​து​தான் இந்த நிலத்தை வாங்​கிய​தாக​வும் தெரி​வித்​தார்.

மேலும், சொத்து தொடர்​பான உரிமை​யில் வழக்கு விசா​ரணை நிலு​வை​யில் உள்​ளது, அவ்​வாறு உரிமை​யியல் வழக்கு நிலு​வை​யில் இருக்​கும்​போது சென்னை உயர்​நீ​தி​மன்​றம் எப்​படி இவ்​வாறான உத்​தரவை பிறப்​பிக்க முடி​யும்? எனவே பத்​திரப்பதிவை சென்னை உயர்​நீ​தி​மன்​றம் ரத்து செய்​திருக்​கக் கூடாது எனவும் தெரி​வித்​தார்.அதற்கு பதிலளித்து பேசிய பழநி கோயில் நிர்​வாகம் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எம்​.சத்​ய​நா​ராயணன் மற்​றும் வழக்​கறிஞர் லட்​சுமணன் ராஜா ஆகியோர், ‘‘இந்த நிலம் தொடர்​பாக ஏற்கெ​னவே தொடரப் பட்ட உரிமை​யியல் வழக்​கில் நிலத்தை சொந்​தம் கொண்டாடும் நபர்​கள் விசா​ரணைக்கு ஆஜரா​காததன் காரண​மாக தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

பின்​னர் அந்த வழக்கை மீட்​டெடுக்க கோரி மனு தாக்​கல் செய்​யப்​பட்​டு, தற்​போது பழநி மாவட்ட நீதி​மன்​றத்​தில் உரிமை​யியல் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது, எனவே நிலம் உரிமை கோரு​வது தொடர்​பாக அந்த நீதி​மன்​றத்தை தான் அணுக முடி​யும். அதேவேளை​யில் நிலத்தை விற்ற முரு​க​தாசின் தந்தை முன்பு தொடர்ந்த வழக்​கில் எந்த ஒரு நிவாரண​மும் கிடைக்​காத நிலை​யில், நிலத்தை எப்​படி விற்க முடி​யும்? இந்த கருத்​தின் அடிப்​படை​யில் தான் சென்னை உயர்​நீ​தி​மன்​றம் பத்​திரப்​ப​திவை ரத்து செய்து உத்​தர​விட்​டது.

எனவே சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு தடை விதிக்க கூடாது’’ என்று வாதிட்​டனர். இதைத்​தொடர்ந்து உத்​தரவு பிறப்​பித்த நீதிப​தி​கள், பத்​திரப் பதிவை ரத்து செய்து உத்​தரவிட்ட சென்னை உயர்​நீ​தி​மன்ற மதுரைக்​கிளை​யின் உத்தர​வுக்கு தடை​வி​திக்க மறுப்பு தெரி​வித்​தனர்.

மேலும், நிலம் தொடர்​பாக பழநி மாவட்ட நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள உரிமை​யியல் வழக்​கில் சேதுப​தி, வெள்​ளத்​துரை ஆகியோரை சேர்ப்​ப​தற்கு உத்​தர​விடு​வ​தாக​வும், அதே வேளை​யில் பத்​திரப்​ப​திவை ரத்து செய்த உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவு என்​பது உரிமை​யியல் வழக்​கின் இறு​தி முடிவுக்​கு கட்​டுப்​பட்​டது என்​றும்​ தெரி​வித்​து மேல்​முறை​யீட்​டு மனுவை முடித்து வைத்தனர்.

உச்ச நீதிமன்றம்
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in