சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி / சென்னை: தமிழகத்​தில் சுருக்​குமடி வலையை பயன்​படுத்​து​வதற்​கான விதி​களை வகுத்து ஆக. 4-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல்செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் மீன்​பிடிக்க சுருக்​குமடி வலையை பயன்​படுத்த அனு​ம​தி​கோரி தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த உச்சநீதி​மன்​றம், கடலில் 12 நாட்​டிக்கல் மைலுக்கு அப்​பால் திங்​கள் மற்​றும் வெள்​ளிக்​கிழமை​களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழக மீனவர்​கள் சுருக்​குமடி வலையை பயன்​படுத்தி மீன் பிடிக்​கலாம் என கடந்த 2023-ல் உத்​தர​விட்​டிருந்​தது.

இதையடுத்து முந்​தைய உத்​தரவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்​றும், சுருக்​குமடி வலைக்கு மத்​திய அரசு தடை விதிக்​காத நிலை​யில் தமிழக கடல் எல்​லை​யில் மீன்​பிடிக்க கூடு​தல் கால வரம்பை நிர்​ண​யம் செய்ய வேண்​டும் எனக் கோரி​யும் மீனவர்​கள் அமைப்பு சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

அந்த மனுக்​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், மத்​திய அரசின் நிபுணர் குழு தாக்​கல் செய்த அறிக்​கை​யில்​கூட சுருக்​குமடி வலை​யில் கடல் வளம் பாதிக்​கப்​படு​கிறது என்று கூறப்​பட்​ட​வில்​லை, எனவே சுருக்கு மடிவலை விவ​காரத்​தில் தமிழக அரசு மீனவர்​களின் கோரிக்​கைகளை செவிமெடுக்க வேண்​டும் என்று தெரி​வித்​தது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிபுணர் குழு அறிக்கை என்​பது மேற்கு கடற்​கரை தொடர்​பானது, தமிழகம் கிழக்கு கடற்​கரை​யில் உள்​ளது, மேலும் மாநில எல்​லைக்கு உட்​பட்ட பகுதி வழி​யாகச் செல்​லும் விசைப்​படகு மீனவர்​கள் சுருக்​குமடி வலைகளை பயன்​படுத்த அனு​ம​தித்​தால் மீன்​வளம் பாதிக்​கும். சுற்​றுச்​சூழலுக்​கும் பவளப்​பாறை​கள், சிறு சிறு மீன் குஞ்​சுகளும் கடுமை​யாக பாதிக்​கப்​படும். எனவே​தான் சுருக்​குமடி வலையை பயன்​படுத்த தமிழக அரசு தடை விதித்​துள்​ளது என தெரி​வித்​தது.

மேலும் கடற்​கரை​யில் இருந்து கடலுக்​குள்​ளாக 12 நாட்​டிக்​கல் மைல் தொலைவு வரையி​லான நீர்ப்​பரப்பு மாநில அரசின் கட்​டுப்​பாட்​டுக்​குள் வரு​கிறது. இந்த கடல் பரப்பை தாண்டி தான் மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டுக்​குள் செல்​வதை கண்​காணிப்​பது கடினம் எனவே சுருக்​கும்​படி வலையை பயன்​படுத்​து​வதற்கு அனு​ம​திக்க இயலாது என்​றும் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்மா மற்​றும் அலோக் ஆராதே அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது அப்​போது நீதிப​தி​கள், சுருக்​குமடி வலையை பயன்​படுத்​து​வது தொடர்​பாக நிபுணர்​கள் குழு அளித்​துள்ள அறிக்​கை​யின் அடிப்​படை​யில் மத்​திய அரசு விதி​களை வகுத்து ஆகஸ்ட் 4-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்டும் என உத்​தரவிட்டு வழக்கை தள்​ளிவைத்​தனர்​.

<div class="paragraphs"><p>உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்</p></div>
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரின் பதிலை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in