

திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியபடி பணி நிரந்தரம் செய்வார்களா என சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யும் அரசாணை 95-ஐ ரத்து செய்ய செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
தொடரும் போராட்டம்: ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலைச் சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கவில்லை: குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு னவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விசாலாட்சி கூறுகையில், தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக் கொடையும் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தனர். ஆனால், கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டும் றுத்தி பல்வேறு அரசு செவிசாய்க்கவில்லை. எனவே. இக்கோரிகையை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.