“திமுக நல்லாட்சி செய்யவில்லை” - சசிகலா குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்.

Updated on
1 min read

திமுக ஆட்​சி​யில் நல்​லாட்சி நடக்​க​வில்​லை; தமிழ்​நாட்டு மக்​கள் மீது எனக்கு நம்​பிக்கை இருக்​கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் பசும்​பொன் கோட்​டைமேடு பகு​தி​யில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் பிறந்த நாளை முன்​னிட்டு அதி​முக முன்​னாள் பொதுச்​செய​லா​ளர் வி.கே.சசிகலா தலை​மை​யில் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடை​பெற்​றது.

இவ்​விழா​வில், வி.கே.சசிகலா பேசி​ய​வாவது: ஜெயலலிதா 2016-ல் உடல்​நிலை சரி​யில்​லாமல் 72 நாள் ஆஸ்​பத்​திரி​யில் இருந்​த​போது அவருடன் இருந்​தேன். அவரை வீட்​டுக்கு அழைத்​துச் செல்ல தயா​ராக இருந்த நிலை​யில் திடீரென யாரும் எதிர்​பார்க்​காத வகை​யில் அவருக்கு ஹார்ட் அட்​டாக் வந்​தது. அது​தான், கடைசி வரை அவரது உடல் நலனுக்கு பாதக​மாக இருந்​தது. ஆனால், ஜெயலலிதா மரணத்​தில் அரசி​யல் செய்​தனர். இதில் எதிரி​கள் என்​னென்ன கதைகள் கட்​டி​விட்​டனர்.

ஜெயலலிதா மறைந்த அன்று இரவு மந்​திரி​கள், எம்​எல்​ஏ.க்​கள் வந்து நீங்​கள்​தான் முதல்​வ​ராக​வும், பொதுச்​செய​லா​ள​ராக​வும் ஆக வேண்​டும் என்​றனர். நான் ஜெயலலி​தாவுக்கு காரி​யம் செய்ய வேண்​டிய​திருக்​கிறது. முன்​பு​போல் பன்​னீர்​செல்​வமே முதலமைச்​ச​ராக இருக்​கட்​டும் என்​றேன். முதலமைச்​ச​ரான பன்​னீர்​செல்​வம் மீது அமைச்​சர்​கள் என்​னிடம் தின​மும் வந்து குறை​கள் சொன்​னார்​கள். பிரச்​சினை​கள் புகைந்​த​தால் தடுக்க நான் முதல்​வ​ராக ஒப்புக்​கொண்​டேன். அவரை​யும் கேட்​டுத்​தான் முடிவு எடுத்​தேன்.

பின்​னர் பன்​னீர்​செல்​வத்​திற்கு என்ன ஆனது தெரிய​வில்​லை. யாரோ சொல்​லி, ஜெயலலிதா சமா​திக்கு சென்று தர்​ம​யுத்​தம் நடத்​தி​னார். தற்​போது அதுவே அவருக்கு சிக்​கலாகி விட்​டது. அதைத் தொடர்ந்து அமைச்​சர்​கள், நிர்​வாகி​கள் நான் வேண்​டாம் என்று சொல்​லி​யும் என்னை தொந்​தரவு பண்ணி பொதுக்​குழுவை கூட்டி பொதுச்​செய​லா​ள​ராக நியமனம் செய்​தனர்.

நான் முதலமைச்​ச​ராக கடிதம் கொடுத்​த​போது ஆளுநர் அங்கு இல்​லை. கடிதம் கொடுத்​தவுடன் நீதி​மன்ற தீர்ப்பு சொல்லி வைத்​தார்​போல் சீக்​கிர​மாக வந்​தது. அதற்​கெல்​லாம் நான் பயப்​பட​வில்​லை. அதி​முக அரசை கலைக்​க​விடக் கூடாது, எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக தற்​போது இருப்​பவரை (பழனி​சாமி) முதலமைச்​ச​ராக அமர​வைத்து விட்டு ஜெயிலுக்கு போக வேண்​டும் என உடனடி முடி​வெடுத்​தேன்.

திமுக ஆட்​சி​யில் நல்​லாட்சி நடக்​க​வில்​லை. தமிழ்​நாட்டு மக்​கள் மீது எனக்கு நம்​பிக்கை இருக்​கிறது அவர்​கள் என்​றும் நம்மை கைவிட மாட்​டார்​கள். புதிய கட்​சியை விரை​வில் ஆரம்​பிக்​கப்​போகிறோம். இது ஒரு​தி​ரா​விட கட்​சி​யாக அண்​ணா, எம்​ஜிஆர், ஜெயலலிதா வழி​யில் ஏழை எளிய சாமானிய மக்​களுக்கு ஆதர​வாக​வும் கட்சி இருக்​கும்.

எதிரி​கள் துரோகி​களை வேரறுக்​கும் கட்​சி​யாக அது இருக்​கும். தற்​போது கட்சி கொடியை மட்​டும் அறி​முகம் செய்​கிறேன். கருப்பு வெள்ளை சிவப்பு வண்​ணத்​தில் அண்​ணா, எம்​ஜிஆர், ஜெயலலிதா உரு​வம், அந்த கொடி​யில் இருக்​கும். கட்​சி​யின்​ பெயரை மட்​டும்​ விரை​வில்​ அறிவிக்​கிறேன்​. இவ்​வாறு அவர்​ பேசினார்.

<div class="paragraphs"><p>ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்.</p></div>
“வெல்வதே இலக்கு” - சீமான் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in