“எங்கள் கூட்டணியால் பலருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது” - ராமதாஸ் - சசிகலா கூட்டாக பிரகடனம்

ராமதாஸ் - சசிகலா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது. படம்.எம்.சாம்ராஜ்

ராமதாஸ் - சசிகலா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது. படம்.எம்.சாம்ராஜ்

Updated on
1 min read

முன்னொரு காலத்தில் தேர்தலுக்குத் தேர்தல் வெற்றிக் கூட்டணியில் அங்கம் வகித்து சாணக்கியராகச் செயல்பட்ட பாமக நிறுனவர் ராமதாஸ் இந்தத் தேர்தலுக்கு சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

அண்மையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து அதன் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்ட சசிகலா, கடந்த 10-ம் தேதி ராமதாஸை சந்தித்துப் பேசினார். மீண்டும் நேற்று மாலை தைலாபுரத்தில் நடைபெற்ற ராமதாஸ் - சசிகலா சந்திப்புக்குப் பிறகு, பாமக-வும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவிருப்பதாக ராமதாஸ் மகிழ்வுடன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ராமதாஸும் சசிகலாவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது “ராமதாஸுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறோம்” என்று சசிகலா ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய ராமதாஸ், “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளோம். இக்கூட்டணி வெற்றிக் கூட்டணி. இது மிகப்பெரிய வெற்றியை பெற்று, தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதனால் பலருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிட உள்ளோம். கொள்கை அளவில் உறுதியாக இருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். விருப்பம் தெரிவிப்பவர்களை இணைப்பது குறித்து அம்மையார் சசிகலாவுடன் இணைந்து முடிவு செய்யப்படும். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது, சில நேரங்களில் நடக்கும்” என்றார்.

<div class="paragraphs"><p>ராமதாஸ் - சசிகலா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது. படம்.எம்.சாம்ராஜ்</p></div>
“4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்” - அமித் ஷா சந்திப்புக்குப் பின் இபிஎஸ் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in