நெய் பதுக்கியதாக சேலம் ஆவின் அதிகாரி பணியிடை நீக்கம்

ஆவின் நெய் | கோப்புப் படம்
ஆவின் நெய் | கோப்புப் படம்
Updated on
1 min read

சேலம்: சேலம் இரும்​பாலை சாலை​யில் ஆவின் பால் பண்ணை செயல்​பட்டு வரு​கிறது. இங்கு பால், நெய், பனீர் உள்​ளிட்ட பல்​வேறு பால் உபபொருட்​கள் தயாரிக்​கப்​படுகிறது.

இந்​நிலை​யில், ஆவின் பண்​ணை​யில் பணி​யாற்​றும் துணைப் பொது மேலா​ளர் சார​தா​வின் அறை​யில் நெய் பாட்​டில்​கள் மறைத்து வைக்​கப்​பட்​டிருப்​பது போன்ற வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது.

இதையடுத்​து, ஆவின் உயர​தி​காரி​கள் துணைப் பொது மேலா​ளர் அறை​யில் திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, அவரது அறை​யில் கணக்​கில் வராமல் சுமார் 40 லிட்​டர் அளவி​லான நெய் பாட்​டில்​கள் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதைத் தொடர்ந்து பால் வளத்​துறை ஆணை​யர் அஜய் யாதவ் சார​தாவை பணி​யிடை நீக்​கம் செய்தார்.

ஆவின் நெய் | கோப்புப் படம்
பெரியார், அம்பேத்கருக்கு விஜய் அரசால் மிகப் பெரிய அவமரியாதை: திமுக காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in