

சென்னையின் விஐபி தொகுதிகளில் ஒன்றான சைதாப்பேட்டையில், திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.அருள்பிரகாசம், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.ஜி.ஸ்ரீவித்யா மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - அரசின் சாதனைகள் தொடர வாக்கு சேகரிப்பு: திமுக வேட்பாளரான மா.சுப்பிரமணியன் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிர பிரச்சாரம் செய்து வரு கிறார். திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள். சைதாப் பேட்டை தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்களை எடுத்து கூறியும், திமுக தேர்தல் அறிக் கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை தெரிவித்தும் வாக்களிக்குமாறு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அமமுக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன், ஏற்கெனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்துள்ளார். ஊழல், போதைப்பொருள் புழக்கம், மின் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்டவற்றை விளக்கி பிரச்சாரம் செய்கிறார். மேலும், மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நாதக - அடிப்படை தேவைகளை முன்வைத்தல்: நாதக வேட்பாளர் எஸ்.ஜி. ஸ்ரீவித்யா, மக்களின் அடிப் படை தேவைகளை நிறைவேற்றுவதை முன்னிறுத்தி தொண்டர்கள் சூழ வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகிறார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி. மாற்றத்துக்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி ஏற்பட தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக - மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும்: தவெக வேட்பாளரான எம்.அருள்பிரகாசம், தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தவெக ஆட்சி அமைந்தவுடன், மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் இல்லாத ஆட்சியாக இருக்கும் என்று உறுதி அளித்து வருகிறார். தேர்தல் நெருங்குவதால் சைதாப்பேட்டை தொகுதியில் கட்சிகளின் பிரச்சாரமும் தீவிரம் அடைந்து வருகிறது.