பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: பூந்​தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் ஏ.எம்​.சவுத்ரி இன்று முதல் 3 நாட்​களுக்கு ஆய்வு நடத்​துகிறார். சென்னையில், 2-ம் கட்​ட​மாக 3 வழித்​தடங்​களில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் பணி​கள் நடை​பெறுகின்றன.

இதில், கலங்​கரை​விளக்​கம் - பூந்​தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவு வழித் தடத்​தில் பல இடங்​களில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இத்​தடத்​தில் ஒருபகு​தி​யாக, பூந்​தமல்லி - போரூர் வரை ரயில் பாதைகள் அமைக்​கப்​பட்​டு, அனைத்து கட்ட சோதனை பணி​கள் முடிக்​கப்​பட்​டன.

பின்​னர், போரூர் - வடபழனி இடையே கட்​டமைப்​பு​கள், சிக்​னல் தொழில்​நுட்​பம், உயர்​மட்ட மின்​பாதை பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. இதையடுத்​து, இத்​தடத்​தி​லும் வெற்​றிகர​மாக மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளன.

தண்​ட​வாள செயல்​திறன், சிக்​னல் அமைப்​பு, ரயில் பெட்டி இணைப்பு திறன் திறன் ஆகிய ஆய்​வு​கள் முடித்​து, இதற்​கான பாது​காப்பு அறிக்​கை, ரயில்வே பாது​காப்பு ஆணை​யரகத்​துக்கு அனுப்​பப்​பட்​டது.

இந்​நிலை​யில், தெற்கு மண்டல ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் ஏ.எம்​.சவுத்ரி தலை​மையி​லான குழு​வினர் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 13-ம் தேதி வரை, பூந்​தமல்லி - வடபழனி வரை​யில் 16 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் பாதைகள், மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் முழு​மை​யாக ஆய்வு நடத்த உள்​ளனர்.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: பூந்​தமல்லி - கலங்​கரை விளக்​கம் வழித் தடத்​தில், பூந்​தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் பாதைகள், ரயில் நிலை​யங்​களில் ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் மற்​றும் அவரது குழு​வினர் ஆய்வு நடத்​து​வர்.

இன்​றும், நாளை​யும் டிராலி​யில் சென்று ரயில் தண்​ட​வாளத்தை ஆய்வு செய்​வர். தொடர்ந்​து, பணி​கள் முடிக்​கப்​பட்டு ரயில் நிலை​யங்​களில் ஆய்வு மேற்​கொள்​வர். ரயில் தண்​ட​வாளம், ரயில் பிரேக் தொழில்​நுட்​பம், பயணி​கள் பாது​காப்பு உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​களில் ஆய்வு நடத்​து​வர்.

3-வது நாளில் மெட்ரோ ரயில் மணிக்கு 80 கி.மீ. வேகத்​தில் இயக்கி சோதனை நடத்​து​வார். பின்​னர், மெட்​ரோ ரயில் இயக்​கு​வது குறித்து ஒப்​புதல் அளிப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையடுத்​து, இந்த தடத்​தில், இந்த மாதம் இறு​திக்​குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை முயற்சி: விஷத்தை பறித்து அருந்திய தாய் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in