சபரிமலை கோயில் தங்க தகடு திருட்டு வழக்கு: ராஜபாளையத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

சபரிமலை கோயில் தங்க தகடு திருட்டு வழக்கு: ராஜபாளையத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
Updated on
1 min read

ராஜபாளையம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கத்​தகடு திருட்டு வழக்கை விசா​ரிக்​கும் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் ராஜ​பாளை​யத்​தைச் சேர்ந்​தவரிடம் விசா​ரணை நடத்​தினர்.

கேரள மாநிலம் பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர்​கள் சிலைகளில் பொருத்​தப்​பட்​டிருந்த தங்​கக்கவசம், நிலைக் கதவில் பதிக்​கப்​பட்ட தங்​கத்​தகடு ஆகிய​வை, கடந்த 2019-ம் ஆண்டு சென்​னை​யில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் செப்​பனிடப்​பட்​டன. அப்​போது 4.54 கிலோ தங்​கம் குறை​வாக உள்​ள​தாக புகார் எழுந்​தது.

இந்த வழக்கை விசா​ரிக்க சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இந்நிலையில் வழக்கு தொடர்​பாக ராஜ​பாளை​யம் அருகே ஜமீன் கொல்​லங்​கொண்​டான் இந்​திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்​பவரது வீட்​டில் சிறப்பு புல​னாய்​வுக் குழு டி.எஸ்​.பி சுரேஷ்​பாபு தலை​மையி​லான போலீ​ஸார் சோதனை நடத்தினர்.

அதன்​பின் கிருஷ்ணனை சேத்​தூர் ஊரக காவல் நிலை​யத்​துக்கு வரவழைத்து விசா​ரணை நடத்​தினர். பின்​னர் இன்று (டிச.30) திரு​வனந்​த​புரத்​தில் உள்ள எஸ்​.ஐ.டி அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு அறி​வுறுத்​தி​யுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்​டம் வண்​டிப் பெரி​யாறு பகு​தி​யைச் சேர்ந்த கிருஷ்ணன், கடந்த 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக பூர்​வீக ஊரான ராஜ​பாளை​யம் அருகே ஜமீன் கொல்​லங்​கொண்​டான் பகு​தி​யில் வசித்து வருகிறார்.

இதுகுறித்து கிருஷ்ணன் கூறும்​போது, “எஸ்​.ஐ.டி போலீ​ஸார் என் வீட்​டில் எந்த பொருளை​யும் கைப்​பற்​ற​வில்​லை. அவர்​களது அழைப்​பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலை​யத்​தில் ஆஜராகி விளக்​கம் அளித்தேன்.

பால​முரு​கன், மணி ஆகியோரை தெரி​யு​மா? எனக் கேட்​டார்​கள். நான்தெரி​யாது என்​றேன். சபரிமலை குறித்து அவர்​கள் என்​னிடம் எது​வும் கேட்​க​வில்​லை” என்றார். கிருஷ்ணன் மீது இரிடி​யம் கடத்​தல் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

சபரிமலை கோயில் தங்க தகடு திருட்டு வழக்கு: ராஜபாளையத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்த நம்பெருமாள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in