கன்னியாகுமரி கோயில்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் தரிசனம்

கன்னியாகுமரி கோயில்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் தரிசனம்
Updated on
1 min read

நாகர்கோவில்: அகில இந்​திய ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் கடந்த 17-ம் தேதி கன்​னி​யாகுமரி வருகை தந்​தார். விவே​கானந்தா கேந்​தி​ரா​வில் தங்​கி, கேந்​திரா வளர்ச்சி திட்டப் பணி​கள் குறித்து கலந்​துரை​யாடி​னார்.

இந்நிலையில் நேற்று கன்​னி​யாகுமரி பகவதி அம்​மன் கோயில் மற்​றும் சன்​னதி தெரு​வில் உள்ள 24-வது சக்தி பீட​மான தியாக சவுந்​தரி பத்​திர​காளி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். இன்று காலை அவர் டெல்லி புறப்​பட்டு செல்​கிறார். ஆர்​எஸ்​எஸ் தலை​வர் வரு​கை​யை முன்னிட்டு மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஸ்டா​லின் தலை​மை​யில் ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

கன்னியாகுமரி கோயில்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் தரிசனம்
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in