மேற்குவங்க ஆளுநரானார் ஆர்.என்.ரவி

மேற்குவங்க ஆளுநரானார் ஆர்.என்.ரவி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்க ஆளுந​ராக ஆர்​.என்​.ரவி நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டார்.

பிஹார் தலைநகர் பாட்​னாவை சேர்ந்த ரவி, ஆரம்ப காலத்​தில் செய்​தி​யாள​ராகப் பணி​யாற்​றி​னார். கடந்த 1976-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யா​னார். கடந்த 2014-ம் ஆண்​டில் மத்​திய அரசின் கூட்டு புல​னாய்​வுக் குழு​வின் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். கடந்த 2018-ம் ஆண்​டில் துணை தேசிய பாது​காப்பு ஆலோ​சக​ராக பதவி​யேற்​றார்.

அரசுப் பணி​யில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்​.என்​.ரவி கடந்த 2019-ம் ஆண்​டில் நாகாலாந்து ஆளுந​ராக நியமிக்​கப்​பட்​டார். அப்​போது மேகாலயா ஆளுநர் பணி​யை​யும் அவர் கூடு​தலாக கவனித்து வந்​தார். கடந்த 2021-ம் ஆண்டு செப்​டம்​பர் 18-ம் தேதி தமிழக ஆளுந​ராக ஆர்​.என். ரவி பதவி​யேற்​றார்.

இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி மேற்​கு​ வங்க ஆளுநர் சி.​வி.ஆனந்த போஸ் திடீரென பதவியை ராஜி​னாமா செய்​தார். அன்​றைய தினம் சில மாநிலங்​களின் ஆளுநர்​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்​டனர். இதன்​படி தமிழக ஆளுந​ராக பணி​யாற்​றிய ஆர்​.என். ரவி, மேற்​கு​வங்க ஆளுந​ராக நியமிக்​கப்​பட்​டார். கடந்த 7-ம் தேதி தமிழக முதல்​வர் ஸ்டா​லின், அவரை நேரில் சந்​தித்து நினைவுப் பரிசு வழங்​கி​னார். சென்​னை​யில் நேற்று முன்​தினம் அவருக்கு வழியனுப்பு விழா நடை​பெற்​றது.

இதைத் தொடர்ந்து மேற்​கு​வங்க தலைநகர் கொல்​கத்​தா​வில் நேற்று நடந்த விழா​வில் அந்த மாநில ஆளுந​ராக ஆர்​.என். ரவி பதவி​யேற்​றுக் கொண்​டார். கொல்​கத்தா உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால், அவருக்கு பதவிப் பிர​மாண​மும் ரகசிய காப்​புப் பிர​மாண​மும் செய்து வைத்​தார்.

முதல்​வர் மம்தா, தலை​மைச் செய​லா​ளர் நந்​தினி சக்​கர​வர்த்​தி, சபா​நாயகர் பிமன் பானர்​ஜி, மார்க்​சிஸ்ட் மூத்த தலை​வர் பிமன் பாசு உள்​ளிட்​டோர் விழா​வில் கலந்து கொண்​டனர். பதவி​யேற்​புக்கு பிறகு முதல்​வர்​ மம்​தா மற்​றும்​ விருந்​தினர்​களு​டன்​ புதி​ய ஆளுநர்​ ஆர்​.என்​.ரவி கலந்​துரை​யாடி​னார்​.

மேற்குவங்க ஆளுநரானார் ஆர்.என்.ரவி
தமிழகப் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் பதவியேற்பு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in