பார் கவுன்சிலுக்கு நியமன பெண் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி, சமரச தீர்வு மைய வழக்கறிஞர் நியமனம்

சுதர்ஷனா சுந்தர், வி.எம்.வேலுமணி, 

சுதர்ஷனா சுந்தர், வி.எம்.வேலுமணி, 

Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி வி.எம்​.வேலுமணி மற்​றும் உயர் நீதி​மன்ற சமரச தீர்வு மைய பயிற்சி​யாள​ரும், வழக்​கறிஞரு​மான சுதர்​ஷனா சுந்​தர் ஆகியோரை நியமன பெண் உறுப்​பினர்​களாக நியமித்து உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு மொத்​தம் 25 பேர் உறுப்​பினர்​களாக தேர்வு செய்​யப்பட வேண்​டும். இதில் 30 சதவீத இடஒதுக்​கீட்​டின்​படி 7 பெண் உறுப்​பினர்​களை நியமிக்க வேண்​டும்.

18 ஆண் உறுப்​பினர்​கள், 5 பெண் உறுப்​பினர்​கள் என 23 பேர் நேரடி தேர்​தல் மூல​மாக​வும், எஞ்​சிய 2 பெண் உறுப்​பினர்​கள் உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யால் நியமன உறுப்​பினர்​களாக​வும் நியமிக்​கப்பட வேண்​டும்.

அதன்​படி, தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு கடந்த மார்ச் 30-ம் தேதி தேர்​தல் நடத்​தப்​பட்​டு, அதில் முன்​னுரிமை வாக்​கு​கள் அடிப்​படை​யில் சென்னை பி.எஸ்​.அமல்​ராஜ், ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ், இ.பால​முரு​கன், என்​.​விஜய​ராஜ், கே.தமிழ்​வாணன், ஆர். கிரி​ராஜன், கே.​பாலு, எம். வேல்​முரு​கன், ஜி. மோக​னகிருஷ்ணன், திருச்​செங்​கோடு சி.பரணிதரன், தூத்​துக்​குடி டி.மைக்​கேல் ஸ்டானிஸ் பிரபு, நாமக்​கல் ஆர்​.அய்​யா​வு, தஞ்​சாவூர் வி.​கார்த்​தி​கேயன், செஞ்சி கே.க​திர​வன்​, ஈரோடு எம்​.அருள்​முரு​கன், சேலம் கே.ஆர்​.ஆர்​.அய்​யப்​பமணி, திருச்சி எம்​.​ராஜேந்​திரகு​மார், மதுரை தாளை முத்​தரசு ஆகியோர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். இதே​போல பெண் வழக்​கறிஞர்​களில் டி.பிரசன்​னா, ஏ.ராஜேஸ்​வரி, எல்​.சும​தி, பி,​சா​வித்​திரி, ஆர். விஜயலட்​சுமி என மொத்​தம் 23 பேர் பார் கவுன்​சில் உறுப்​பினர்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உறுப்​பினர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி, தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்​கான 2 பெண் நியமன உறுப்​பினர்​களை நியமித்​துள்​ளார்.

அதன்​படி, ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி வி.எம்​.வேலுமணி மற்​றும் உயர் நீதி​மன்ற சமரச தீர்வு மைய பயிற்​சி​யாள​ரும், வழக்​கறிஞரு​மான சுதர்​ஷனா சுந்​தர் ஆகியோரை நியமன உறுப்​பினர்​களாக நியமித்து உத்​தர​விட்​டுள்​ளார். இதற்​கான அறி​விப்பை சென்னை உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர்​ தீப்​தி அறி​வும​தி வெளி​யிட்​டுள்​ளார்​.

<div class="paragraphs"><p>சுதர்ஷனா சுந்தர், வி.எம்.வேலுமணி,&nbsp;</p></div>
பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ‘போக்சோ போர்டல் 2.0’ - அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in