“உச்ச நீதிமன்ற தீர்ப்பை அப்படியே நிறைவேற்றுவோம்” - ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

Updated on: 
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அப்படியே நிறைவேற்றுவோம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படாத நிலையில் கோயில் அறங்காவலர்கள் குழுவை கலைத்து கோயில் நிர்வாக பொறுப்பையும், தீபத்தூணில் தீபம் ஏற்றும் பொறுப்பையும் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) எஸ்.வைத்தியாநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) வி.பார்த்தீபன் ஆகியோரிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் இருவரும் சென்னையில் இருந்து விமானத்தில் இன்று (நவ.28) காலை மதுரை வந்தனர். விமான நிலையத்தில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இன்று தான் கிடைத்தது. அதை முழுமையாக படித்து பார்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படும். மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது, தீபம் எப்போது ஏற்றுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இப்போது வரை எப்போது தீபம் ஏற்றுவது என்பது முடிவு செய்யவில்லை” என்றார்.

பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

<div class="paragraphs"><p>ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன்</p></div>
திருப்பரங்குன்றத்தில் மத்திய ரிசர்வ் படையினர் குவிப்பு: தீபத்தூணில் தீபம் ஏற்றும் ஏற்பாடுகளும் தீவிரம்

X