நீலகிரியில் நிலச்சரிவு பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியாறு பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர்.

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியாறு பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர்.

Updated on: 
1 min read

ஊட்டி: நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் கடந்த 24ம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டு அரசு பேருந்து சிக்கி மண்ணில் புதைந்ததில், அரசு பேருந்து ஓட்டுனர் ஜனகராஜ் உயிரிழந்தார்.

நிலச்சரிவு பகுதியில் சிக்கிய கேரள மாணவர்கள் 268 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊருகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. ஜேசிபி உட்பட 20-க்கும் மேற்பட்ட கனரக இயந்திரங்களைக் கொண்டு மண்குவியல் மற்றும் ராட்சதப் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழையால் பச்சைமலையில் நிலச்சரிவு: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியாபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பச்சைமலைப் பகுதிக்கு உப்பிலியாபுரத்தில் இருந்து சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் சாலையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரிய பாறாங்கல் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை 10 மணி வரை சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடிபாடுகளை அகற்றியதையடுத்து, சாலை போக்குவரத்து சீரானது.

<div class="paragraphs"><p>நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியாறு பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர்.</p></div>
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in