தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

திமுக, காங்கிரஸ் ஆதரவு; அதிமுக, பாஜக எதிர்ப்பு
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
Updated on
2 min read

சென்னை: அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.12) தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள்.

“தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. திமுகவை பொறுத்தவரை பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம்” என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர், “நாடாளுமன்றத்தில் தொகுதிமறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தவெக அரசு அவசர அவசரமாக தனி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு சாதகமாக உள்ளதா? பாதகமாக உள்ளதா? எனத் தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது.

அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது; அதிமுக இதை நிராகரிக்கிறது,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, “தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு ஒன்றிய அரசு சட்ட முன்வடிவு கொண்டு வராத நிலையில், எதன் அடிப்படையில் தனித்தீர்மானம் சரியாக இருக்கும்,” என தேதிமுக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

“தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். முதல்வர் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும். தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை ஆதரவிக்கவில்லை,” என பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

“மாற்றம் வேண்டும் என்று மக்கள் கருதிய காரணத்தால்தான் நீங்கள் இப்போது ஆட்சியில் இருக்குறீர்கள். காலப்போக்கில் தேவையான, ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசினர் தனித் தீர்மானத்தை எதிர்த்து, தொகுதி மறுவரையறையை கட்சிகள் ஏற்க வேண்டும்,” என பாஜக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார்.

“தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய வடமாநில எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்களே பிரதமர்களாகவும், கேபினட் அமைச்சர்களாகவும் வர வாய்ப்பு ஏற்படும். முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தற்போது அவசியமானது. பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் ஒன்றும், வெளியும் வெவ்வேறாக பேசுகிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை வரவேற்கிறோம்” என விசிக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். பின்னர் சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார ஆதரிக்கிறது. தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது. தொகுதி மறுவரையறை சம்மந்தமாக அனைத்து கட்சிகளுடனும், மாநிலங்களுடனும் பாஜக பேசிய பிறகுதான், முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தின் இடைநிலை தொகுதிகளை குறைப்பதுதான் பாஜவின் நோக்கம். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றார்.பின்னர் சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார ஆதரிக்கிறது. தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது. தொகுதி மறுவரையறை சம்மந்தமாக அனைத்து கட்சிகளுடனும், மாநிலங்களுடனும் பாஜக பேசிய பிறகுதான், முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தின் இடைநிலை தொகுதிகளை குறைப்பதுதான் பாஜவின் நோக்கம். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றார்.

சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார ஆதரிக்கிறது. தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது. தொகுதி மறுவரையறை சம்மந்தமாக அனைத்து கட்சிகளுடனும், மாநிலங்களுடனும் பாஜக பேசிய பிறகுதான், முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தின் இடைநிலை தொகுதிகளை குறைப்பதுதான் பாஜவின் நோக்கம். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றார்.

அமைச்சர் ஷாஜகான் (ஐயூஎம்எல்) பேசும்போது, “பாஜகவின் தீர்மானங்கள் நாட்டு மக்களின் குரலுக்கு மதிப்பு அளிக்காமல், தங்களின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் உள்ளது. மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை ஐயூஎம்எல் கட்சி ஆதரிக்கிறது” என்று கூறினார்.

அதிமுக, பாஜக,பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. தேமுதிக தனது நிலைப்பாட்டை சரியாக சொல்லவில்லை.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
“தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது” - உதயநிதி ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in