“மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து... தமிழகத்தில் வெறுப்பு எஞ்சின் ஓடாது” - மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: ‘மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பாஜக, இந்தியா முழுவதும் இதையே செய்யத் துடிக்கிறது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க. இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள். அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.

அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க. இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?

தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் என்டிஏ வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி. இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான். இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம். "தமிழ்நாடா என்டிஏ-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலின்</p></div>
மாநிலங்களவைத் தேர்தல் ‘கணக்கு’ - நெருக்கடியில் அதிமுக... சிக்கலில் திமுக!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in