பழநி நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக பதிவுத்துறை உயர்நிலை குழு விசாரணை தொடக்கம்

Updated on
1 min read

பழநி: ​திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​பிலான நிலப்​ப​திவு முறை​கேடு குறித்து பதிவுத்​துறை சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள 3 பேர் கொண்ட உயர்​நிலைக் குழு நேற்று தனது விசா​ரணையைத் தொடங்​கியது.

பழநி​யில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​பிலான நிலத்தை முறை​கே​டாக பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சம்​பந்​தப்​பட்ட சார்பதி​வாளர், மாவட்ட பதி​வாளர், நிலத்தை வாங்​கிய​வர்​கள் மற்​றும் அவர்​களது உறவினர்​களின் வீடு​களில் சிபிசிஐடி போலீ​ஸார் சோதனை நடத்​தி, முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றினர்.

மேலும், தலைமறை​வாக உள்ள இந்த நிலத்தை விற்ற தண்​ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளையைச் சேர்ந்த முரு​க​தாஸ், நிலத்தை வாங்​கிய வெள்​ளைத்​துரை மற்​றும் சேதுபதி ஆகிய 3 பேரை​யும் தனிப்​படை அமைத்து தீவிர​மாகத் தேடிவரு​கின்​றனர். முறை​கேடு தொடர்​பாக விசா​ரிப்​ப​தற்​காக பதிவுத் ​துறை சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள 3 பேர் கொண்ட உயர்​நிலை விசா​ரணைக் குழு​வில் உள்ள கூடு​தல் பதிவுத் துறைத் தலை​வர் சுதா மல்​யா, உதவி பதிவுத்​துறைத் தலை​வர் பூங்​கொடி, சென்னை மாவட்​டப் பதி​வாளர் கண்​ணன் ஆகியோர் நேற்று பழநி பதி​வாளர் அலு​வல​கத்​துக்கு வந்​தனர்.

அங்கு மாவட்ட பதி​வாளர் (தணிக்​கை) செல்​வகு​மார் மற்​றும் அலு​வலக பணி​யாளர்​களிடம் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்​தினர். சர்ச்​சைக்​குரிய ரூ.100 கோடி நில ஆவணங்​களை ஆய்வு செய்​தனர். மேலும், பத்​திரப்​ப​திவு நடந்த ஜூலை 6-ம் தேதி பதி​வான சிசிடிவி காட்​சிகளை​யும் ஆய்வு செய்​தனர்.

இதற்​கிடையே, 5-வது நாளாகவிசா​ரணை நடத்​து​வதற்​காக சிபிசிஐடி போலீ​ஸார் நேற்று காலை 9.30 மணிக்கு பதிவுத்​துறை அலு​வல​கத்​துக்கு வந்​தனர். தங்​களுக்கு தேவை​யான ஆவணங்​கள், வீடியோ பதிவு​களை எடுத்​துச் சென்​றனர். உயர்​நிலைக் குழு மற்​றும் சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை காரண​மாக நேற்று பொது​மக்​கள் நீண்ட நேரம் காத்​திருந்து பத்​திரப்​ப​திவு செய்​யும் நிலை ஏற்​பட்​டது.

போலீ​ஸார் ஆலோ​சனை: திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் எஸ்பி ஷாஜிதா நேற்று டிஎஸ்பி அஜய் தங்​கம் மற்​றும் போலீ​ஸாருடன் ஆலோ​சனை மேற்​கொண்​டார். அப்போது, தலைமறை​வாக உள்ள நிலத்தை விற்​றவர், நிலத்தை வாங்​கியோர் மற்​றும் மோசடிக்கு காரண​மானவர்​களை கைது செய்ய ஆலோ​சனை​களை வழங்​கி​னார்.

பழநி நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக பதிவுத்துறை உயர்நிலை குழு விசாரணை தொடக்கம்
“இளைஞர்களுக்கு எதிரான பிரதமர்” - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in