

வந்தவாசி: வந்தவாசி அருகே தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (35). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், நேற்று வழக்கமான பணிக்கு வெளியில் சென்றுவிட்டார். இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தது. அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. இந்த தீ விபத்தில் கரும்பு வெட்டுவதற்காக முன்பணமாக வாங்கி வைத்திருந்த ரூ.70ஆயிரம் ரொக்கம், 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து கீழ்கொடுங்காவலூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.