தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் விஜய் வராதது ஏன்? - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்
ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்
Updated on
1 min read

சிவகங்கை: ஜன​நாயகன் திரைப்​படம் ஓடாத​தால் தான் விஜய் 3 நாட்​களாக தலை​மைச் செயல​கத்​துக்கு வரவில்லை என முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார் கூறி​னார்.

சிவகங்​கை​யில் முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார் பேசி​ய​தாவது: பழனி​சாமி​யிடம் உண்​மை, உழைப்​பு, கருணை இருக்​கிறது. விஜய் போல வசீகரம், பஞ்ச் டயலாக் பேசி இளைஞர்​களை பஞ்​ச​ராக்க அவருக்கு தெரிய​வில்​லை. மக்​கள் மனதை படிக்க தெரிந்த பழனி​சாமிக்கு நடிக்க தெரிய​வில்​லை. அமைச்​சர் பதவிக்​காகத்​தான் சில எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​தனர்.

கரூர் சம்​பவத்​தில் விஜய்யை காப்​பாற்​றிய​வர் பழனி​சாமி. ஆனால், அவரை மனி​தாபி​மானம் இல்​லாமல் விஜய் பேசி வரு​கிறார். அதி​முக​விலிருந்து வேறு கட்​சிக்கு சென்​றோர் உரிய மரி​யாதை கிடைக்​காமல் உள்​ளனர். இவ்​வாறு அவர் பேசினர்.

அதைத்​ தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​து: ஜனநாயகன் திரைப்​படம் ஓடாத​தால் 3 நாட்​களாக முதல்​வர் விஜய் தலை​மைச் செயல​கத்​துக்கு வரவில்​லை. காவல்​துறை கட்​டமைப்பை வலுப்​படுத்​தாமல் காவல் மரணங்​களை தடுக்க முடி​யாது. தவெக அரசின் ஆயுட்​காலம் எண்​ணப்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது.

ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்
“சோனம் வாங்சுக்கின் தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” - சிஜேபி புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in