ரேஷன் ஊழியர்கள் கடையடைப்பு வாபஸ்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் அக்​.14-ம் தேதி (இன்​று) நடைபெறவிருந்த ரேஷன் கடை பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டம் வாபஸ் பெறப்பட்டது.

முன்னதாக, ரேஷன் கடை பணி​யாளர்​கள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பா.​தினேஷ்கு​மார் வெளி​யிட்ட அறிக்​கையில், “காஞ்சிபுரம் மாவட்ட நுகர்​வோர் கூட்​டுறவு விற்​பனை பண்​டக​சாலைக்கு தரமற்ற வெங்​கா​யம் அனுப்​பப்​பட்​ட​தாக மதுர​வாயல் கடை​யின் விற்​பனை​யாளர் யுவ​ராணி தற்​காலிக பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்ளது வேதனை அளிக்​கிறது.

இதுதொடர்​பாக கூட்​டுறவுத்​துறை அமைச்​சரைச் சந்​தித்து முறையிட்​டோம். உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக உறு​தி​யளித்​தும், தற்​காலிகப் பணி நீக்க ஆணை ரத்து செய்​யப்​பட​வில்​லை.

எனவே, கூட்​டுறவுத் துறை​யின் செயல்​பாட்​டைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ரேஷன் கடை பணி​யாளர்​கள் அக்​.14-ம் தேதி (இன்​று) கடையடைப்பு போராட்​டத்​தில் பங்​கேற்​று, தற்​காலிகப் பணிநீக்க ஆணையை உடனடி​யாக ரத்து செய்ய வலி​யுறுத்த உள்​ளோம்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட பணியிடை நீக்கம் ரத்து ஆணையில், “தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட கே.யுவராணி விற்பனையாளரை பண்டகசாலையின் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு தற்காலிக பணிநீக்கத்தில் இருந்து மீண்டும் பணியமர்த்தம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. வேலப்பன்சாவடி நியாய விலைக் கடையில் அவர் பணியமர்த்தப் படுகிறார்.

இச்செயல்முறை ஆணை உடன் அமலுக்கு வருகிறது. இவர் புதிய பணியில் சேர்ந்து, பணிசேர் அறிக்கை மற்றும் பொறுப்பு ஏற்பு பட்டியலை உடன் தலைமை அலுவலகம் அனுப்பி வைக்க பணிக்கப்படுகிறார். மேலும், பணியாளர் பணியில் சேராமல் விடுப்பு விண்ணப்பம் சமர்ப்பித்தால் ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in