ரேஷன் ஊழியர்கள் இன்று கடையடைப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: ரேஷன் கடை பணி​யாளர்​கள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பா.​தினேஷ்கு​மார் வெளி​யிட்ட அறிக்​கை​: காஞ்​சிபுரம் மாவட்ட நுகர்​வோர் கூட்​டுறவு விற்​பனை பண்​டக​சாலைக்கு தரமற்ற வெங்​கா​யம் அனுப்​பப்​பட்​ட​தாக மதுர​வாயல் கடை​யின் விற்​பனை​யாளர் யுவ​ராணி தற்​காலிக பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்ளது வேதனை அளிக்​கிறது.

இதுதொடர்​பாக கூட்​டுறவுத்​துறை அமைச்​சரைச் சந்​தித்து முறை​யிட்​டோம். உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக உறு​தி​யளித்​தும், தற்​காலிகப் பணி நீக்க ஆணை ரத்து செய்​யப்​பட​வில்​லை.

எனவே, கூட்​டுறவுத் துறை​யின் செயல்​பாட்​டைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ரேஷன் கடை பணி​யாளர்​கள் அக்​.14-ம் தேதி (இன்​று) கடையடைப்பு போராட்​டத்​தில் பங்​கேற்​று, தற்​காலிகப் பணிநீக்க ஆணையை உடனடி​யாக ரத்து செய்ய வலி​யுறுத்த உள்​ளோம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in