2 மாதங்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்: ரூ.10 கோடி மதிப்புள்ள மீன்களை அள்ளி வந்தனர்

இரு மாதங்களுக்குப் பிறகு பரபரப்பாக காணப்பட்ட ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம்.

இரு மாதங்களுக்குப் பிறகு பரபரப்பாக காணப்பட்ட ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம்.

Updated on
1 min read

ராமேசுவரம்: மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து கடலுக்​குச் சென்ற ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் அதிக மீன்​கள் கிடைத்​த​தால் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

தமிழகத்​தில் மீன்பிடி தடைக்​காலம் ஜுன் 14 அன்​றுடன் முடிவடைந்​த​ நிலையில் விசைப்​படகு மீனவர்​கள் தற்​போது கடலுக்​குச் சென்று வரு​கின்​றனர். ஞாயிற்​றுக்கிழமை மாலை​யி​லிருந்து சுமார் 700-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் சுமார் 3,500 மீனவர்​கள் ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து மீன் பிடிக்​கச் சென்​றனர்.

இப்​படகு​கள் செவ்​வாய்க்​கிழமை அதி​காலை முதல் ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​துக்கு திரும்​பத் தொடங்​கின. ராமேசுவரத்​தில் நேற்று மட்​டும் விசைப்​படகு மீனவர்​களுக்கு சுமார் 2 லட்​சம் கிலோ இறால் மீன், கணவாய், நண்டு ஆகிய ஏற்​றுமதி மீன்​களும், செறை​யா, பாறை, திருக்கை உள்​ளிட்ட இதர மீன்​கள் சுமார் 3 லட்​சம் கிலோ வரை​யிலும் கிடைத்​துள்​ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடிக்​கும் மேல் ஆகும்.

வழக்​க​மாக முதல் தரமான இறால் ஒரு கிலோ இறால் ரூ.500-க்கு மேல் விலை போகும். ஆனால் மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து முதல் நாள் மீனவர்​கள் கரை திரும்​பிய​தில் அதி​கள​வில் இறால் சிக்​கிய​தால் வியா​பாரி​கள் இறால்​களை விலை நிர்​ண​யம் செய்​யாமல் கொள்​முதல் செய்​தனர். மேலும், மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து கடலுக்​குச் சென்ற ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​களுக்கு அதிக மீன்​கள் கிடைத்​தால் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். இந்​நிலை​யில் மீன்​பிடித் தடைக்​காலம் முடிவதற்கு முன்​ன​தாக டோக்​கன் இன்றி கடலுக்​குச் சென்ற விசைப் படகு​களுக்கு டீசல் மானி​யம் ரத்து செய்​வது தொடர்​பாக மீன்​வளத் துறை​யினர் ஆலோ சனை செய்து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>இரு மாதங்களுக்குப் பிறகு பரபரப்பாக காணப்பட்ட ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம்.</p></div>
‘வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!’ - தங்கம் தென்னரசு விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in