

“பாமக பொதுக்குழுவை கூட்டஎனக்கு அனுமதி இல்லை” என கூறுவதற்கு அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் ஒரு வழிப்போக்கன் சொல்வது போல் சொல்லி விட்டுச் செல்கிறார்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
நேற்று பெரியார் நினைவு தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பொய்யர்கள், புரட்டர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
99 சதவீத பாட்டாளி மக்கள் என் பக்கம் இருக்கின்றனர். அதனால் பொய்யும், புரட்டும் எடுபடாது. நிறுவனரான நான், பாமக-வில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டேன். அவர் இப்போது கட்சியில் இல்லை. கட்சியின் உறுப்பினர் கூட கிடையாது.
அப்படி இருக்கையில், பாமக பொதுக்குழுவை கூட்ட எனக்கு அனுமதி இல்லை என்று சொல்வதற்கு அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் ஒரு வழிப்போக்கன் சொல்வது போல் சொல்லிவிட்டுச் செல்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.