பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்
அன்புமணி, ராமதாஸ்

அன்புமணி, ராமதாஸ்

Updated on
1 min read

சென்னை: பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ் தாக்​கல் செய்​துள்ள புதிய மனுவுக்​கு, அன்​புமணி தரப்​பு வேட்​பாளர்​கள் பதிலளிக்க சென்னை உரிமை​யியல் நீதி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்துள்​ளது.

பாமக​வின் பெயர், கொடி, சின்​னத்தை பயன்​படுத்​தக்​கூ​டாது என அன்​புமணி தரப்​புக்கு தடை விதிக்​கக் கோரி​யும், கட்​சி​யின் தலை​வ​ராக தன்னை அறிவிக்​கக் கோரி​யும் ராம​தாஸ் தரப்​பில் ஏற்​கெனவே சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு பிர​தான வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்த வழக்​கில் இதுதொடர்​பாக தடைகோரி ராம​தாஸ் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட இடைக்​கால மனுக்​களை ஏற்​கெனவே நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்ளது.

இந்​நிலை​யில் ராம​தாஸ் தரப்​பில், சென்னை 13-வது பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் புதி​தாக தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனு​வில், “அன்​புமணி ஏற்​கெனவே பாமக​வில் இருந்து நீக்​கப்​பட்டு விட்​டார். அவருக்​கும் பாமக​வுக்​கும் எந்​தத் தொடர்​பும் கிடை​யாது. அவர் சட்​ட​விரோத​மாக பாமக​வின் தலை​வ​ராக நீடித்து வரு​கிறார். இதுதொடர்​பான வழக்கு இதே நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் எனது புகைப்​படத்தை பயன்​படுத்தி வாக்கு சேகரிப்​பில் ஈடு​படக்​கூ​டாது என அன்​புமணி தரப்​பில் போட்​டி​யிடும் 18 வேட்​பாளர்​களுக்​கும் தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி தர்​மபிரபு, இதுதொடர்​பாக அன்​புமணி தரப்​பில் போட்​டி​யிடும் 18 வேட்​பாளர்​களும் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்து விசா​ரணையை ஏப்​.21-க்கு தள்​ளி​வைத்​தார்.

<div class="paragraphs"><p>அன்புமணி, ராமதாஸ்</p></div>
“பிரதமர் மோடியை விட பெரிய பெண்ணியவாதி இருக்க முடியாது” - கங்கனா புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in