“இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதியாகும்” - இழுக்கும் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

Updated on
1 min read

​யாருடன் கூட்​டணி என்​பது இன்​னும் மூன்று நாளில் முடி​வாகும் என பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​தார்.

“நமது இலக்கை அடைவதற்​கான வாக​னம் வந்​து​விட்​டது” என்று கடந்த வாரம் சொன்ன ராம​தாஸ், இன்​னும் கூட்​ட​ணியை முடிவு செய்ய முடி​யாத குழப்​பான நிலை​யில் இருக்​கி​றார். இதனால் அவரது விசு​வாசிகள் நம்​பிக்கை இழந்து வரு​கின்​ற​னர்.

இந்த நிலை​யில், அவர்​களை உற்​சாகப்​படுத்​து​வதற்​காக நிர்​வாகி​கள் கருத்​துக் கேட்​புக் கூட்​டத்தை நேற்​றும் தைலாபுரத்​தில் நடத்​தி​னார் ராம​தாஸ். கடந்த ஒரு வாரத்​தில் ராம​தாஸ் நடத்​திய 2-வது கருத்​துக் கேட்​புக் கூட்​டம் இது. இந்​தக் கூட்​டத்​தில் பாமக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி, செயல் தலை​வர் ​காந்தி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பங்​கேற்​ற​னர்.

கூட்​டத்​துக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய ராம​தாஸ், “பாமக, இப்​போது முக்​கிய​மான கால கட்​டத்​தில் இருக்​கிறது. நாங்​கள் இன்​னும் கூட்​டணி பற்றி முடிவு செய்​ய​வில்​லை; விரை​வில் முடிவு செய்​வோம். கூட்​ட​ணி​யைப் பற்றி முடிவு செய்​யாத​தால் கூட்​டணி தொடர்​பான கேள்வி​களுக்கு என்​னிடம் பதில் இல்​லை” என்​றார்.

“நமக்​கான வாக​னம் வந்​து​விட்​டது என்று சொன்​னீர்​களே... அந்த வாக​னத்​தில் எதாவது மாற்​றம் இருக்​கிற​தா..?” செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, “மாற்​றங்​கள் வரு​வது இயற்​கை. ஒரு முடிவு எடுத்து விட்​டால் உறு​தி​யாக இருப்​போம். அடுத்த 3 நாட்​களில் தமிழக அரசி​யலில் பரபரப்பு இருக்​கும். இன்​னும் 3 நாட்​களில் கூட்​டணி உறுதி செய்​யப்​படும்” என்​றார். “தை பிறந்​தால் வழி பிறக்​கும்” என்று சொல்லி வந்த ராம​தாஸ், மாசியி​லா​வது மகிழ்ச்​சி​யான முடிவை அறி​விப்​பாரா என்று பார்​க்​கலாம்.

<div class="paragraphs"><p>பாமக நிறுவனர் ராமதாஸ்</p></div>
இறங்கி வந்த திமுக.. முறுக்கிக் கொள்ளும் காங்கிரஸ்! - இழுபறி சிக்கலை தீர்க்குமா சிதம்பரத்தின் மூவ்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in