

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தனது புதிய அரசியல் இயக்கத்தை டிச.6-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படஉள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அழைப்பிதழில், “பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி தலைமையில், சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு புதிய அரசியல் பயணம் தொடங்குகிறது.
மக்களின் நலன், உரிமைகள், எதிர்கால தலைமுறையின் முன்னேற்றத்தை லட்சியமாகக் கொண்டு தொடங்கப்படும் இந்த இயக்கத்தின் தொடக்க விழா, டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.