உத்திரமேரூர் பாமக வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்

உத்திரமேரூர் பாமக வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் மாவட்​டம் உத்​திரமேரூர் தொகு​தி​யில் பாமக சார்​பில் மாவட்​டச் செயலர் பெ.மகேஷ்கு​மார் போட்​டி​யிடு​வார் என அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், கட்​சி​யின் நிறு​வனர் தனது அணி சார்​பில் மாவட்​டச் செயலர் சு.ஸ்ரீதர் போட்​டி​யிடு​வார் என்று அறி​வித்​துள்​ளார்.

பாமக அன்​புமணி ராம​தாஸ் தலை​மை​யில் ஒரு பிரி​வாக​வும், கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் தலை​மை​யில் ஒரு பிரி​வாக​வும் செயல்​பட்டு வந்​தது. தற்​போது தேர்​தல் ஆணை​யம் மற்​றும் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, பாமக சின்​னம் அன்​புமணி ராம​தாஸுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. அவர் அதி​முக​வுடன் கூட்​டணி அமைத்​து, மாவட்​டச் செயலர் பெ.மகேஷ்கு​மார் உத்​திரமேரூரில் போட்​டி​யிடு​வார் என்று அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், பாமக நிறு​வனர் ராம​தாஸ் தனது தரப்பு மாவட்​டச் செயலர் சு.ஸ்ரீதர் உத்​திரமேரூர் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வார் என்று அறி​வித்​துள்​ளார்​. இந்த தொகு​தி​யில் 5 முறை வெற்றி பெற்ற திமுக மாவட்​டச் செயலர் க.சுந்​தர் போட்​டி​யிடு​கிறார்.

இவரை எதிர்த்​துப் போட்​டி​யிடும் பாமக வேட்​பாளர் மகேஷ்கு​மார், கடந்த தேர்​தலில் காஞ்​சிபுரம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு 91,117 வாக்​கு​கள் பெற்று, 11,595 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தற்​போதைய எம்​எல்ஏ எழிலரசனிடம் தோல்​வியடைந்​தார்.

மக்​களிடம் செல்வாக்கு

உத்​திரமேரூர் அதி​காரப்​பூர்வ பாமக வேட்​பாளர் பெ.மகேஷ்கு​மார் என்​றாலும், நிறு​வனர் ராம​தாஸுக்கு வன்​னியர் சமூக மக்​களிடம் ஒரு குறிப்​பிட்ட செல்​வாக்கு உண்டு.

இந்​நிலை​யில், நிறு​வனர் ராம​தாஸ் தனது தரப்பு மாவட்​டச் செயலர் சு.ஸ்ரீதரைப் போட்டி வேட்​பாள​ராக அறி​வித்​திருப்​பது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இவர்​கள் எந்​தக் கட்​சி​யின் சார்​பில் தேர்​தலை எதிர்​கொள்​ளப் போகிறார்​கள், எந்​தச் சின்​னத்​தில் போட்​டி​யிடு​வார்​கள் என்​பது குறித்​து எது​வும்​ அறிவிக்​கப்​பட​வில்​லை.

உத்திரமேரூர் பாமக வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்
பாலாற்றில் தடுப்பணைகள்.. கொளவாய் ஏரியில் படகு சவாரி: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in