தமிழகத்தில் ஏப்ரல் 7 வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 7 வரை மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தின் உள் மாவட்​டங்களில் இருந்து வட கர்நாட​கா​வின் உள்​பகுதி வரை சுமார் 900 மீட்​டர் உயரத்​தில், காற்றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று (ஏப்​.2) முதல் 4-ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்​கள், மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் மிதமான மழை பெய்​யக்​கூடும். 4-ம் தேதி தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

5, 6-ம் தேதி​களில் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 7-ம் தேதி தென் தமிழகம், வடக்கு கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்யக்​கூடும். வட தமிழகத்​தின் உள்​பகு​தி​களில் வறண்ட வானிலை நில​வும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேக மூட்​டத்​துடன் காணப்​படும். வெப்​பநிலை 79 டிகிரி முதல் 95 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை இருக்​கக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்று வெப்​பநிலை வழக்​கம்​போல இருக்​கும். 3, 4, 5-ம் தேதி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும். சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 7 வரை மழை பெய்ய வாய்ப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணப்பட்டுவாடாவை தடுக்கக் கோரிய மனு தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in