

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட ஒடிசா முதல் தெலங்கானா, கர்நாடகா வழியாக தென் தமிழகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை சுமார் 900 மீட்டர் உயரத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 30) முதல் ஏப்.2-ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
3-ம் தேதி மேற்கண்ட பகுதிகளுடன் தென் தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யும். 4-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.