பொங்கல் பண்டிகைக்கு நவ.14-ம் தேதி ரயில்வே டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கு நவ.14-ம் தேதி ரயில்வே டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
Updated on: 
1 min read

சென்னை: பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு, சொந்த ஊருக்கு ரயில்​களில் செல்​வோர் வசதிக்​காக ரயில் டிக்​கெட் முன்​ப​திவு வரும் 14-ம் தேதி தொடங்​கு​கிறது.

அடுத்த ஆண்டு ஜன.15-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை) பொங்​கல் பண்​டிகை கொண்​டாடப்​பட உள்​ளது. ஜன.14-ம் தேதி போகி பண்​டிகை வரு​கிறது. இப்​பண்​டிகையை முன்​னிட்டு, சொந்த ஊருக்கு ரயி​லில் முன்​ப​திவு செய்து பயணிக்க, 60 நாட்​கள் முன்​னதாகவே டிக்​கெட் முன்​ப​திவு செய்​யும் வசதி உள்​ளது. அதன்​படி, பொங்​கலுக்கு ஊருக்குச் செல்ல, வரும் 14-ம் தேதி முதல் முன்​ப​திவு தொடங்​கு​கிறது.

இதற்காக ஜன.13-ம் தேதி பயணம் செய்ய விரும்​புவோர், வரும் 14-ம் தேதி​யும், ஜன.14-ம் தேதி பயணம் செய்ய விரும்​பவோர் வரும் 15-ம் தேதி​யும், ஜன. 15-ல் பயணம் செய்ய விரும்புவோர் வரும் 16-ம் தேதி​யும் முன்​ப​திவு செய்​ய​லாம்.

இதேபோல் பண்​டிகைக்கு ஊருக்குச் சென்​றவர்கள் மறுமார்க்​க​மாக திரும்​பும் வகையில், ஜன.18-ம் தேதி பயணிக்க நவ.19-ம் தேதி​யும், ஜன.19-ல் பயணிக்க நவ.20-ம் தேதி​யும் முன்​ப​திவு செய்​ய​லாம் என்று தெற்கு ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு நவ.14-ம் தேதி ரயில்வே டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தியை அதிகரிக்க புதிய இயந்திரங்கள், உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு

X