1.82 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் ஏழைகளுக்கான குடும்ப அட்டை

உடனே திருப்பித் தர வாரியம் உத்தரவு
1.82 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் ஏழைகளுக்கான குடும்ப அட்டை
Updated on: 
1 min read

சென்னை: பொருளாதா​ரத்​தில் பின்​தங்​கிய மற்​றும் வறுமைக் கோட்​டுக்கு கீழே உள்​ளவர்​களுக்கு தேசிய உணவுப் பாது​காப்​புச் சட்ட குடும்ப அட்டை வழங்​கப்​படு​கிறது. இது சரியான பயனாளி​களுக்​குதான் வழங்​கப்​படு​கிறதா என்று மத்​திய உணவு, பொது விநியோகத் துறை ஆய்வு மேற்​கொண்​டது. இதில், 1.82 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ரயில்வே ஊழியர்​கள் இந்த அட்​டையை வைத்​திருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து, ரயில்வே மண்​டல பொது மேலா​ளர்​கள், உற்​பத்​திப் பிரிவு ஊழியர்​களுக்கு ரயில்வே வாரியம் அனுப்​பியுள்ள சுற்​றறிக்​கை​:

பெரும்​பாலான மாநில, யூனியன் பிரதேச அரசு விதி​களின்​படி, அரசு ஊழியர்​கள், பொதுத் துறை நிறு​வனங்​கள், தன்​னாட்சி அமைப்​பு​கள், உள்​ளாட்சி அமைப்​பு​களின் ஊழியர்​கள் தேசிய உணவுப் பாது​காப்​புச் சட்​டத்​தின் கீழ் எந்த ஒரு சலுகையும் பெறத் தகுதி​யற்​றவர்​கள். அந்த வகை​யில், ரயில்வே ஊழியர்​களும் சலுகைகள், மானியங்​களைப் பெற தகுதி​யற்​றவர்​கள் என்​ப​தால், அந்த குடும்ப அட்​டையைப் பயன்​படுத்த வேண்​டாம் என அவர்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும்.

இச்​சட்​டத்​தின்​கீழ் வழங்​கப்​பட்ட ரேஷன் அட்​டைகளை திருப்​பித் தரு​மாறு அறி​வுறுத்த வேண்​டும்.

ரயில்வே ஊழியர்​கள் இந்த அட்டை மூலம் சலுகைகள், மானியங்​களைப் பெற்​றுள்​ளனரா என்​பதை உறுதி செய்ய, வேண்​டும். சலுகைகளைப் பெறவில்லை என்​றால், அது​தொடர்​பான உறுதி​மொழிப் படிவத்தை சம்​பந்​தப்​பட்ட ஊழியர்​களிடம் இருந்து பெற்​றுக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சராசரியாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்​சம் வரை மாத ஊதி​யம் பெறும் ரயில்வே ஊழியர்​கள் ஏழைகளுக்​கான குடும்ப அட்டை வைத்​திருப்​பது மத்​திய அரசின் ஆய்வு மூலம் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இது​குறித்து ரயில்வே தொழிற்​சங்க மூத்த தலை​வர் மனோகரன் கூறியபோது, “முழு​மையான விசா​ரணை, சரியான நெறி​முறை இல்​லாமல் குடும்ப அட்டை விநியோகிப்​பதே இதற்கு காரணம். இருப்​பிடச் சான்று உள்​ளிட்ட பல​வற்​றுக்​கும் அது ஒரு அடை​யாள அட்​டை​யாக இருப்​ப​தால்​கூட ரயில்வே ஊழியர்​கள் வாங்கி இருக்​கலாம். எனவே, மானியம் இல்​லாத அட்​டை​வழங்​கிய பிறகு, இதை திரும்​பப் பெறலாம்” என்​றார்.

1.82 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் ஏழைகளுக்கான குடும்ப அட்டை
2029 சாம்பியன்ஸ் டிராபி, 2031 உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது: ஐசிசி

X