பிஎல்எம் நிதி முறைகேடு வழக்கில் 12 இடங்களில் சோதனை: பிரேம்குமாரின் ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்

அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை
பிஎல்எம் நிதி முறைகேடு வழக்கில் 12 இடங்களில் சோதனை: பிரேம்குமாரின் ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்
Updated on: 
2 min read

சென்னை: பிஎல்​எம் நிதி நிறு​வன முறைகேடு வழக்​கில் தமிழகம் மற்​றும் கேரளாவில் 12 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யின் முடி​வில், நிறு​வனர் ஆர். பிரேம்​குமார் தொடர்​புடைய ரூ.103 கோடி மதிப்​பிலான அசையும் மற்​றும் அசையா சொத்​துகளை முடக்​கி​யுள்​ளனர்.

கேரளாவைச் சேர்ந்த ஆர்.பிரேம்​குமார், பாரத் லஜ்னா மல்டி ஸ்​டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்​டிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்எம்) நிறு​வனத்​தின் நிறு​வனர் ஆவார். இவர் நிறு​வனத்​தில் நிதி முறைகேட்​டில் ஈடு​பட்டு, பொது​மக்​களிடம் இருந்து வசூலிக்​கப்​பட்ட பணத்​தைத் தனது சொந்த ஆதாயத்​துக்​குப் பயன்​படுத்​தி​ய​தாகப் புகார்​கள் எழுந்​தன.

இது​தொடர்​பாக கேரள காவல் துறை வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​யது. இதில் சட்​ட​விரோத பணப்​பரிமாற்​றம் நடை​பெற்​றதற்​கான முகாந்​திரம் இருந்​ததால், கேரள காவல் துறையின் முதல் தகவல் அறிக்​கை​ அடிப்​படை​யில் அமலாக்​கத் துறையும் பண மோசடி தடுப்​புச் சட்​டத்தின் கீழ் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கியது.

இந்த வழக்கு விசா​ரணை​யின் ஒரு பகுதி​யாக, நேற்​று முன்​தினம் கொச்சி மண்​டல அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தமிழகம் மற்​றும் கேரளாவில் பிரேம்​குமார் தொடர்​புடைய கொச்சி, கோழிக்​கோடு, திருச்​சூர், திரு​வனந்​த​புரம், மன்​னார்​காடு, சென்னை உள்​ளிட்ட 12 இடங்​களில் சோதனை நடத்​தினர்.

இந்​தச் சோதனை​யில், நிறு​வனத்​தின் பெயரில் பொது​மக்​களிடம் இருந்து வசூலிக்​கப்​பட்ட பணத்​தைப் பிரேம்​குமார் தனது பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​களின் பெயரிலும் சொத்​துகள் வாங்​கு​வதற்​குப் பயன்​படுத்​தி​யது தெரிய வந்​துள்​ளது.

இது​குறித்து அமலாக்​கத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: பிரேம்​குமார் சுமார் 320 வங்​கிக் கணக்​கு​களைப் பயன்​படுத்தி நிறு​வனத்​தின் நிதி​யைப் பல்​வேறு வழிகளில் பரிவர்த்​தனை செய்​திருக்​கிறார்.

இந்த வங்​கிக் கணக்​கு​களை ஆய்வு செய்​ததில், நிறு​வனத்​தின் பொது​மக்​கள் நிதி தனிப்​பட்ட ஆதாயத்​துக்​காகவும், அசையும், அசையா சொத்​துகளை வாங்​கு​வதற்கும் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது தெரிய வந்​துள்​ளது.

மேலும், நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான சொத்​துகளை அட​மானம் வைத்து, பல்​வேறு வங்​கி​கள் மற்​றும் நிதி நிறு​வனங்​களிடம் இருந்து கடன் பெற்​றிருப்​ப​தும் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

இவ்​வாறு பெறப்​பட்ட பணம், பிரேம்​குமாரின் குடும்ப உறுப்​பினர்​கள் மற்​றும் அவருடன் தொடர்​புடைய நபர்​களின் பெயர்​களில் சொத்​துகள் வாங்​கு​வதற்​குப் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

சோதனை​யின் போது, பல கோடி ரூபாய் மதிப்​பிலான சொத்​துகள் மற்​றும் அவை தொடர்​பான ஆவணங்​கள் கண்​டறியப்​பட்​டன.

அதன்​படி, சுமார் ரூ.7.3 கோடி மதிப்​பிலான 8 ஆடம்​பர சொகுசு கார்​கள், ரூ.9.6 கோடி மதிப்​பிலான 7,400 கிராம் தங்க நகைகள், ரூ.80 கோடி மதிப்​பிலான பங்​கு​கள், ரூ.5 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகள், ரூ.1.86 கோடி வங்கி இருப்​புத் தொகை என மொத்​தம் ரூ.103 கோடி மதிப்​பிலான அசையும் மற்​றும் அசையா சொத்​துகள் முடக்​கப்​பட்​டுள்​ளன.

நிறு​வனத்​தின் பணம் பல்​வேறு வங்​கிக் கணக்​கு​கள் வாயி​லாகப் பல நபர்​களுக்​கும் நிறு​வனங்​களுக்​கும் மாற்​றப்பட்டுள்​ளது.

மேலும், வங்​கிக் கணக்​கு​கள், சொத்து ஆவணங்​கள் மற்​றும் நிதிப் பரிவர்த்​தனைகள் தொடர்​பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வரு​கிறது.

இந்த முறைகேடுகள் மூலம் மொத்​தம் எவ்​வளவு தொகை கையாடல் செய்​யப்​பட்​டுள்​ளது என்​ப​தை கணக்​கிடும் பணி​யும் நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

பிஎல்எம் நிதி முறைகேடு வழக்கில் 12 இடங்களில் சோதனை: பிரேம்குமாரின் ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்
மரகதம் குமரவேல் உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

X