தமிழக காங். எம்பி - எம்எல்ஏக்களை சந்திக்கிறார் ராகுல்

தமிழக காங். எம்பி - எம்எல்ஏக்களை சந்திக்கிறார் ராகுல்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகளால் திமுக தலைமை மிகுந்த அப்செட் ஆகியிருக்கிறது. ராகுலுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்ததில் இருந்தே இந்த புகைச்சல் ஆரம்பித்து விட்டது.

இந்த சந்திப்புக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்லிவிட்ட நிலையில், “கடன் வாங்குவதில் உபி அரசை மிஞ்சிவிட்டது தமிழக அரசு” என்று சொல்லி திமுக வட்டாரத்தை உக்ரமாக்கி இருக்கிறார் பிரவீன் சக்ரவர்த்தி. அவரது அரசியல் ஆசானான ப.சிதம்பரமே இந்தக் கூற்றைக் கண்டித்திருக்கும் நிலையில் தேர்தல் வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கதர்வேட்டிகள் கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இத்தனை களேபரங்கள் நடந்த பிறகும் வழக்கம் போல் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் அமைதி காக்கிறது டெல்லி காங்கிரஸ் தலைமை. இதுவும் திமுக வட்டாரத்தை சங்கடப்படுத்தி வருகிறது. ‘ஒருவேளை ராகுல் தான் பிரவீன் சக்ரவர்த்தி மூலம் திமுக-வை ஆழம் பார்க்கிறாரோ’ என்று திமுக-வுக்குள்ளேயே சிலர் சந்தேகத்தைக் கிளப்பும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது பிரச்சினை.

இந்தச் சூழலில் தான் புத்தாண்டின் தொடக்கத்திலேயே ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ-க்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏ-வான எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “ஆமாங்க... ராகுல் அழைப்பு விடுத்திருப்பதாக மாநிலத் தலைவர் கூறியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரும். அதனால் தயாராக இருங்கள் என்றும் சொல்லி இருக்கிறார்” என்றார்.

கூட்டணி குறித்து உங்கள் கருத்துகளை கேட்கவா இந்த சந்திப்பு என்று கேட்டதற்கு, “அதுபற்றியெல்லாம் தெரியாதுங்க... ஆனால் தொகுதியில் எஸ்ஐஆர் சம்பந்தப்பட்ட பணிகளை முழுமையாக செய்து முடித்து, அதன் விவரங்களையெல்லாம் உடனடியாக தலைமைக்கு அனுப்புமாறு சொல்லி இருக்கிறார்கள். அதற்கான வேலைகளில் தான் தற்போது தீவிரமாக இருக்கிறோம்” என்றார் அவர்.

தமிழக காங். எம்பி - எம்எல்ஏக்களை சந்திக்கிறார் ராகுல்
திமுகவை வீழ்த்தவே பாஜகவுடன் கூட்டணி என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்: இபிஎஸ் அறிவுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in