“இண்டியா கூட்டணியில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்” - ஜோதிமணி உறுதி

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

படம்: ஜெ.மனோகரன்

Updated on
1 min read

கோவை: இண்டியா கூட்டணியில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த குழப்பமும் இல்லை என கோவையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று (ஆக.22) நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சுப்பராயன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜோதிமணி எம்.பி கூறியது: “நாடாளுமன்றத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொகுதி மறுவரை விவகாரத்தில் தவெக எந்த மாற்று நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை, எடுக்கவும் மாட்டார்கள்.

543 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும், இதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார். இதனடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவெக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

பாஜக எதிர்ப்பு என்பது ஓவ்வொருவருக்கும் ஒரு மாதிரி இருக்கிறது. தவெகவுக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் என வரும் பொழுது அவர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். இந்த பாஜக ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். இதில் எந்த குழப்பமும் இல்லை. ராகுல் காந்தியால் மட்டும்தான் பிரதமர் மோடியை வீழ்த்த முடியும். இண்டியா கூட்டணித் தலைவர்கள் அனைவருமே ராகுல் காந்தியை முன்னிறுத்தி தான் செயல்படுகின்றனர்.

தவெக தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுவை என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக இண்டியா கூட்டணியில் இருந்த போது, தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

இன்று அதை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக நினைக்கவில்லை. அவர்கள் பொறுப்பான முறையில் முடிவு எடுப்பார்கள். தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என தனியாக ஒரு அலுவலகம் தமிழக அரசு கட்டிக் கொடுக்க வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்ட ஒரு கல்லை கூட வைக்க விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் செளந்தரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.  </p></div>
மேகமலையில் வசிக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வெளியேற உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in