9 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி: தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்​யின் பதவி​யேற்பு விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக சென்னை வந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு தமிழக காங்​கிரஸ் தலை​மையக​மான சத்​தி​யமூர்த்தி பவனுக்கு வருகை தந்​தது கட்​சி​யினரிடையே பெரும் எழுச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

நேற்று காலை டெல்​லியி​லிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்​தி, நேரு உள்​ விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்ற ஜோசப் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​கும் விழா​வில் கலந்து கொண்​டார்.

அங்​கிருந்து நேராக சத்​தி​யமூர்த்தி பவன் சென்​றார். திரண்​டிருந்த ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் கைத்தட்டி அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

அலு​வலக வளாகத்​தில் உள்ள காம​ராஜரின் திரு​வுரு​வப் படத்​துக்கு ராகுல் காந்தி மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். கட்சிக்கு பலம் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முக்​கிய நிர்​வாகி​களு​டன் ராகுல் காந்தி ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் பேசுகை​யில், “தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சியை அடிமட்​டம் வரை பலப்​படுத்​தத் தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் முன்​னெடுக்க வேண்​டும். அதற்கு அகில இந்​திய காங்​கிரஸ் தலைமை முழு ஒத்​துழைப்பை வழங்​கும்” எனத் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

முன்​ன​தாக, கடந்த 2017 ஜூன் மாதம் இந்​திரா காந்தி நினைவு நூல​கத்​தைத் திறந்து வைக்க ராகுல் காந்தி சத்​தி​யமூர்த்தி பவன் வந்​திருந்​தார்.

அதன்​பின் பலமுறை தமிழகம் வந்​திருந்​தா​லும், சுமார் 8 ஆண்​டு​கள் 11 மாதங்​களுக்​குப் பிறகு நேற்​று​தான் அவர் மீண்​டும் கட்​சித் தலை​மையகத்​துக்கு வருகை தந்​துள்​ளார்.

இதனால் தொண்​டர்​கள் உற்​சாகத்​தின் உச்​சத்​தில் காணப்​பட்​டனர். பயணத்தை முடித்​துக்​கொண்டு மதி​யம் 1 மணி​யள​வில் அவர் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அவரை செல்​வப்​பெருந்​தகை மற்​றும் மேலிடப் பொறுப்​பாளர்​கள் வழி அனுப்பி வைத்​தனர்.

<div class="paragraphs"><p>தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p></div>
விஜய்யின் அறிவிப்புகளுக்கு பாமக, கம்யூனிஸ்ட் வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in