“சோனியா இத்தாலி தேசத்தவர் என்பதால் ராகுல் அச்சம்...” - நயினார் நாகேந்திரன்

“சோனியா இத்தாலி தேசத்தவர் என்பதால் ராகுல் அச்சம்...” - நயினார் நாகேந்திரன்
Updated on: 
1 min read

திருச்சி: “சோனியா இத்தாலி நாட்டுக்காரர் என்பதால், தனது வாக்குரிமை போய்விடுமோ என்று ராகுல் அச்சம் கொள்கிறார்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார். அவர் எதை நினைத்து இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஆளும் கேரளாவில் எஸ்ஐஆர் குளறுபடி எதுவும் இல்லை. அம்மாநில அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, எஸ்ஐஆர் வந்ததால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்கும்போது, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் எஸ்ஐஆர் குளறுபடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டுவது ஏன்? ராகுல் காந்தியின் தாய் இத்தாலி நாட்டுக்காரர் என்பதால், தனது வாக்குரிமை போய்விடுமோ என்று ராகுல் அச்சம் கொள்கிறார்.

தவெக அரசு மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. கடந்த தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கான அவசியம் தற்போது வந்துள்ளது. காரணம், அவருடைய மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் நல்ல தீர்ப்பைப் பொறுத்து, தமிழகத்தின் எதிர்காலம் இருக்கும்.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்போகிறார்கள் என தெரியவில்லை. கடந்த கால அரசு என்ன செய்ததோ, அதையே தான் தற்போதைய அரசும் செய்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

“சோனியா இத்தாலி தேசத்தவர் என்பதால் ராகுல் அச்சம்...” - நயினார் நாகேந்திரன்
பட்டயக் கணக்காளரின் சில தவறுகளுக்கு முதல்வர் விஜய் பொறுப்பாக முடியுமா? - சென்னை உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in