ஆள் பிடிக்கும் வேலை தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: தவெகவுக்கு ஆர்பி.உதயகுமார் எச்சரிக்கை

ஆள் பிடிக்கும் வேலை தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: தவெகவுக்கு ஆர்பி.உதயகுமார் எச்சரிக்கை
Updated on
1 min read

மதுரை: ஆள் பிடிக்​கும் வேலை​யைத் தொடர்ந்​தால் கடும் விளைவு​களைச் சந்​திக்க நேரிடும் என தவெகவுக்கு முன்​னாள் அமைச்​சர் ஆர்​பி. உதயகு​மார் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட வீடியோ பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது; அள்ள அள்​ளக் குறை​யாத அட்சய பாத்​திரம் அதி​முக. 90 சதவீதம் எங்​களது தொண்​டர்​கள் தவெகவில் இணைவ​தாக அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா தெரி​வித்​துள்​ளார். கேட்க நாதி இல்லை என்ற நிலை​யில் அவர் தொடர்ந்து பேசுகிறார்.

நம்பிக்கை இழந்து விட்டீர்களா?

உங்​களது கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் மீது நம்​பிக்கை இழந்து விட்​டீர்​களா. உங்​கள் தலை​வர் மீது நம்​பிக்கை இழந்​துள்​ளீர்​களா, எம்​ஜிஆர், ஜெயலலி​தா, பழனி​சாமி வழி வந்த தொண்​டர்​களை கட்​சி​யில் சேருங்​கள் என பிச்சை எடுக்​கும் வகை​யில் கூவி கூவி அழைக்​கிறீர்​களே?

விஜய்​யின் மக்​கள் செல்​வாக்கு கேள்விக்​குறி ஆகி​விட்​டதா அல்​லது அதை நிலை நிறுத்த அதி​முக தொண்​டர்​களே வாருங்​கள் என, விலைபேசி பிச்சை எடுக்​கிறீர்​களா, இதற்கு விஜய் தடை போட​வேண்​டும்.

இந்த நாடகத்தை அவர் அனு​ம​திக்​கிறாரா என்​பதே எங்​களது தொண்​டர்களின் கேள்​வி​யாக உள்​ளது. அதிமுக தொண்​டர்​களை விலை பேசமுடி​யாது என்​ப​தற்கு பல சான்​றுகள், சாட்​சிகள் உள்​ளன.

எங்​களைக் குறைத்து மதிப்​பி​டாதீர். அதி​முகவை அழிக்க நினைப்​பவர்​கள் தோற்​றுப் போய் உள்​ளனர். அதி​கார ஆசை காட்டி அமைச்சர் தொடர்ந்து கூவு​கிறார். தேர்​தலில் 34 சதவீதம் வாக்​கு​களைப் பெற்​றாலும் மக்​கள் நம்​பிக்கை பெறாத கட்சி தவெக.

அதி​காரத்​தால் முயற்சி செய்​தா​லும் அதி​முக தொண்​டர்​கள் உறு​தி​யோடு உள்​ளனர். 5 ஆண்​டு​களில் எத்​தனை கட்​சிக்​குச் சென்​றவர் நீங்​கள்.

அதிமுகவை அழிக்க முடியாது

தவெக​வுக்கு முன்பு அதி​முக​வில் சேர முயற்​சித்தீர்​கள். உங்​களால் அதி​முகவை அழிக்​கவே முடி​யாது.

யானை தனது தலை​யில் மண்​ணைப் போட்​டுக் கொண்​டது போன்று உங்​களது அழி​வுக்கு முயற்​சிக்​கிறீர்​கள். ஆட்​கள் பிடிக்​கும் வேலையைத் தொடர்ந்​தால் கடும் விளைவு​களைச் சந்​திக்க நேரிடும்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

ஆள் பிடிக்கும் வேலை தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: தவெகவுக்கு ஆர்பி.உதயகுமார் எச்சரிக்கை
டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் தூர்வார வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in