பட்டு வளர்ப்புத் துறையில் புதிய பதவிகளுக்கான சிறப்பு கல்வித்தகுதிகள்: அரசாணை வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் கைத்​தறி, கைவினைப்​ பொருட்​கள், துணிநூல் மற்​றும் காதித்​துறை​யின் செயலர் வி.அ​முதவல்லி வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பட்​டு​வளர்ப்​புத் துறை பணி​யிடங்​களுக்கு சிறப்பு விதி​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி, பட்​டு​வளர்ப்பு உதவி இயக்​குநர் நேரடி நியமனத்​துக்கு எம்​எஸ்சி விவ​சா​யம் (பட்​டு ​வளர்ப்​பு) பட்​டம் கல்​வித் ​தகு​தி​யாக நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அதே​போல், பட்​டு​ வளர்ப்பு உதவி ஆய்​வாளர் பதவிக்​கான குறைந்​த​பட்ச கல்​வித்​தகுதி பிஎஸ்சி பட்​டு​ வளர்ப்பு பட்​டம் ஆகும்.

பட்​டு​ வளர்ப்பு இளநிலை ஆய்​வாளர் பதவிக்கு தோட்​டக்​கலை அல்​லது விவ​சா​யத்​தில் டிப்​ளமோ பெற்​றிருக்க வேண்​டும். அல்​லது உயி​ரியல் அல்​லது தாவர​வியல், விலங்​கியல் பாடங்​களு​டன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும். இவ்​வாறு அந்த அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது. பட்​டு​வளர்ப்​புத் துறை​யில் உதவி இயக்​குநர், உதவி ஆய்​வாளர், இளநிலை ஆய்​வாளர் ஆகிய பதவி​கள் புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டிருப்​ப​தால் அவற்​றுக்​கான நேரடி நியமனங்​கள் டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக விரை​வில் மேற்​கொள்​ளப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in