ரேடியோ மேற்பார்வையாளர்: பொதுப்பணித் துறையில் புதிய பணியிடம் தோற்றுவிப்பு

ரேடியோ மேற்பார்வையாளர்: பொதுப்பணித் துறையில் புதிய பணியிடம் தோற்றுவிப்பு
Updated on
1 min read

சென்னை: பொதுப்​பணித் துறை​யில் ரேடியோ மேற்​பார்​வை​யாளர் என்ற புதிய பணி​யிடம் தோற்​று​விக்​கப்​பட்டு அதற்​கான கல்​வித் தகு​தி​யும் நிர்​ண​யிக்​கப்​பட்டு அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் பொதுப்​பணித் துறை​யில் தற்​போது புதி​தாக ரேடியோ மேற்​பார்​வை​யாளர் (Radio Supervisor) என்ற புதிய பதவி தோற்​று​விக்​கப்​பட்​டுள்​ளது. நேரடி நியமன முறை​யில் நிரப்​பப்​படும் இந்த பதவிக்கு கல்​வித் தகு​தி​யாக, எலெக்ட்​ரானிக்ஸ் மற்​றும் கம்​யூனிகேஷன் இன்​ஜினியரிங் டிப்​ளமா படிப்பு (டிசிஇ) நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது. இதற்​கான அரசாணையை பொதுப்​பணித் துறை​யின் செயலர் ஆர்​.செல்​வ​ராஜ் வெளி​யிட்​டுள்​ளார்.

பொதுப்​பணித் துறை​யில் புதி​தாக ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள ரேடியோ மேற்​பார்​வை​யாளர் பதவிக்கு பொறி​யியல் டிப்​ளமா படிப்பு கல்​வித் தகு​தி​யாக இருப்​ப​தால் இப்​ப​த​வி​யானது டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்வு (டிப்​ளமா மற்​றும் ஐடிஐ கல்​வித்​தகுதி பதவி​கள்) வாயி​லாக நிரப்​பப்​படும். டிஎன்​பிஎஸ்​சி-​யின் 2026 தேர்​வுக் கால அட்​ட​வணை​யின்​படி, ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்​வுக்​கான (டிப்​ளமா மற்​றும் ஐடிஐ கல்​வித்​தகு​தி) அறி​விப்பு ஜூலை 7-ம் தேதி (செவ்​வாய்) வெளி​யிடப்​படு​கிறது. இதற்​கான தேர்வு செப். 20-ம் தேதி நடத்​தப்பட உள்​ளது. இத்​தேர்​வுக்​கான அறி​விப்​பில் பொதுப்​பணித் துறை ரேடியோ மேற்​பார்​வை​யாளர் பணி​யிடம் இடம்​பெறலாம் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

ரேடியோ மேற்பார்வையாளர்: பொதுப்பணித் துறையில் புதிய பணியிடம் தோற்றுவிப்பு
“மைலேஜ் குறைந்துவிட்டது” - E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in