தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டு: விசாரணை ஆணையம் அமைக்க ‘புதிய தமிழகம்’ வேண்டுகோள்

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

Updated on: 
1 min read

கோவை: தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இடைத்தேர்தலில் இதுவரை எங்கும் இல்லாத அளவுக்கு ஆதாயத்துக்காக கட்சி மாறிய வேட்பாளர்களுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தது. இது நல்ல அறிகுறி. ஆதாயத்துக்காக கட்சி மாறும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மதுராந்தகம், தாராபுரம் படிப்பினைகளைத் தரும்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடைபெறுகின்றன. 16 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்தும், யாருக்காக இது நடந்தது, அரசியல் தலையீடு இருக்கிறதா என்பது குறித்தும் சுதந்திரமான விசாரணை தேவை.

வேலியே பயிரை மேய்ந்துவிட்டால் ஜனநாயகம் தழைக்காது. தலைமைத் தேர்தல் அதிகாரியே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணசாமி</p></div>
‘சொத்து விவரம் எதையும் மறைக்கவில்லை’ - முதல்வர் விஜய் தரப்பு வாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in