புதிய தமிழகம் யாருடன் கூட்டணி? - கோவையில் நாளை ஆலோசனை

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி - கோப்புப் படம்: நா.தங்கரத்தினம்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி - கோப்புப் படம்: நா.தங்கரத்தினம்.

Updated on
1 min read

பரபரப்​பான அரசி​யல் சூழலில் புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் கோவை​யில் நாளை (மார்ச் 5) நடை​பெறவுள்​ளது.

ஆளும் கட்​சி​யான திமுக​வும், எதிர்க்​கட்​சி​யான அதி​முக​வும் தேர்​தலுக்​கான தங்​கள் கூட்​ட​ணியை வலுப்​படுத்​தும் முயற்​சி​யில் தீவிர​மாக இறங்​கி​யுள்​ளன. புதிய கட்​சிகளை கூட்​ட​ணி​யில் சேர்ப்​பது, தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை ஆகிய​வற்றை மேற்​கொண்டு வரு​கின்​றன. அந்​தவகை​யில், இந்த இரண்டு கட்​சிகளுமே புதிய தமி​ழ​கம் கட்​சியை தங்​கள் பக்​கம் இழுப்​ப​தற்​கான முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கின்​றன.

புதிய தமி​ழ​கம் கட்​சி​யானது தங்​களுக்கு 10 தொகு​தி​களை​யும் ஒரு ராஜ்ய சபா சீட்​டை​யும் எதிர்​பார்க்​கிறது. ஆனால், திமுக தரப்​பில் இரண்டு தொகு​தி​கள் கொடுத்து அவர்​களை கூட்​ட​ணிக்​குள் கொண்​டுவர பேசி வரு​கி​றார்​கள். அதேசம​யம், அதி​முக தரப்​பில் கடந்த ஒரு மாத​மாக நடை​பெற்று வரும் பேச்​சு​வார்த்​தை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் அவசர ஆலோ​சனை கூட்​டம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி தலை​மை​யில் கோயம்​புத்​தூரில் நாளை (மார்ச் 5) நடை​பெறவுள்​ளது. இக்​கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள 300-க்​கும் மேற்​பட்ட முக்​கிய நிர்​வாகி​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து புதிய தமி​ழ​கம் கட்சி நிர்​வாகி​கள் கூறுகை​யில், “தமிழக அரசி​யல் நில​வரம், யாருடன் கூட்​டணி அமைப்​பது, எத்​தனை சீட்​கள் பெறு​வது உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து நாளைய கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​படும். நிர்​வாகி​களின் கருத்​தைக் கேட்டு யாருடன் கூட்​டணி என்​ப​தை​யும்​ தலை​வர்​ முடிவு செய்​வார்​” என்​றனர்​.

<div class="paragraphs"><p>புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி - கோப்புப் படம்: நா.தங்கரத்தினம்.</p></div>
இறங்கி வந்த திமுக.. முறுக்கிக் கொள்ளும் காங்கிரஸ்! - இழுபறி சிக்கலை தீர்க்குமா சிதம்பரத்தின் மூவ்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in