

‘நீதிமன்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது’ என தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு புகழேந்தி நேற்று மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் வழங்கியது தவறு என தொடுத்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது.
ஏற்கெனவே, அதிமுக வழக்கு சம்பந்தமாக நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நிலுவையில் உள்ள சிவில் வழக்கின் முடிவுதான் இறுதியானது. சூரியமூர்த்தி தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தன்னை பொதுச்செயலாளர் என்று தவறாகப் போட்டு விட்டதாகக் கூறி திருத்தி இணை ஒருங்கிணைப்பாளர் என்று பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார். ஆகவே, தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்டு பொதுக்குழுவை கூட்டியது தவறு. அதன் தீர்மானங்
களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. மேலும், இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.