“பொதுத்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் சீரழிந்துவிட்டன” - அன்புமணி குற்றச்சாட்டு

அன்புமணி

அன்புமணி

Updated on
1 min read

சென்னை: தி​முக அரசின் நிர்​வாகச் சீர்​கேடு​களால் பொதுத்​துறை நிறு​வனங்கள் சீரழிந்​து​விட்​டதாக பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்தார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இந்​தி​யா​வில் 2022-23-ம் ஆண்​டில் மாநில அரசின் பொதுத்​துறை நிறு​வனங்​களால் அதிக இழப்பை சந்​தித்த 3 மாநிலங்​களில் உத்​தரப்​பிர தேசம், ராஜஸ்தானை அடுத்​து தமிழகத்​தில் பொதுத்​துறை நிறு​வனங்​கள் எதிர்​கொண்ட இழப்பு ரூ.16,048 கோடியாகும்.

மொத்​த​முள்ள 102 பொதுத்​துறை நிறு​வனங்​களில் 100 நிறு​வனங்​கள் மட்​டும்​தான் செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்​றில் 54 நிறு​வனங்​கள் லாபத்​தி​லும், 35 நிறு​வனங்​கள் நஷ்டத்​தி​லும் இயங்​கு​கின்​றன. சிப்​காட் உள்ளிட்ட 54 நிறு​வனங்​கள் 2022-23-ல் ஈட்​டிய லாபம் ரூ.2,560 கோடி மட்​டும்​தான்.

அதே​நேரம் நஷ்டத்​தில் இயங்​கும் 35 நிறு​வனங்​கள் அதே ஆண்​டில் ஏற்​படுத்​திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். திமுக அரசின் ஊழல்​கள், நிர்​வாகச் சீர்​கேடு​கள் காரண​மாக பொதுத்துறை நிறு​வனங்​கள் சீரழிந்து விட்​ட​தால், வரி அல்​லாத வரு​வாய் அதல​பா​தாளத்​துக்குச் சென்று விட்​டது. வரும் தேர்தலில் தி​முக​வுக்கு மக்​கள் பாடம் புகட்​டப் போவது உறு​தி. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>அன்புமணி </p></div>
‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in