

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பதாக மீனவ அமைப்புகள் அறிவித்துள்ளன.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அப்பகுதியில் உள்ள மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், மீன்வளத்துறை சார்பில், மீனவ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளை நேற்று கைபேசியில் அழைத்து, இன்று (நவ.3) ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதில் ஒவ்வொரு அமைப்பின் ஓரிரு பிரதிநிதிகள் மட்டும் வந்து பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வமான அழைப்பு வராத நிலையில் மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில், கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என நேற்று கடிதம் அளித்துள்ளதாக நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி தெரிவித்துள்ளார்.