உச்ச நீதிமன்ற தீர்ப்பு தள்ளிவைப்பால் மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

கடமலைக்குண்டுவில் 4-வது நாளாக நடைபெற்ற காத்திருப்பு பேராட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒருபகுதி.

கடமலைக்குண்டுவில் 4-வது நாளாக நடைபெற்ற காத்திருப்பு பேராட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒருபகுதி.

Updated on: 
1 min read

வருசநாடு: வன வெளியேற்ற நடவடிக்கையை கண்டித்து கடமலைக்குண்டுவில் நடந்த போராட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து தன்னிச்சையாக ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தேனி மாவட்டத்தைச் சார்ந்த வருசநாடு, மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியது. இதனைக் கண்டித்து மலைவாழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இதன் ஒருபகுதியாக கடந்த 26-ம் தேதி கடமலைக்குண்டுவில் மலைகிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து காத்திருப்புப் பேராட்டத்தை தொடங்கினர். இரவும், பகலும் அங்கேயே தங்கி சமைத்து உண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்றன. 4-ம் நாளான நேற்று போராட்டம் உச்சம் தொட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகள் திரளாக கலந்துகொண்டன. இவர்களுக்கு ஆதரவாக மலைகிராமங்களில் கடையடைப்பு போராட்டங்களும் நடைபெற்றதால் இப்பகுதியே ஸ்தம்பித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேகமலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், வனப்பகுதியில் வெளியாட்கள் மூலம் அதிகளவில் இலவம் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. பழங்குடியினரைவிட ஆக்கிரமிப்பாளர்களே அங்கு அதிகம் உள்ளனர் என்று கண்டனம் தெரிவித்ததுடன் தீர்ப்பையும் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

இதனைத் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று வனக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இப்போராட்டத்தினால் மலைகிராமங்களில் பெரும் தாக்கம் நிலவி வந்தது. பலரும் வீட்டை மறந்து, இரவும், பகலும் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதால் வனகிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

<div class="paragraphs"><p>கடமலைக்குண்டுவில் 4-வது நாளாக நடைபெற்ற காத்திருப்பு பேராட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒருபகுதி.</p></div>
ரகுபதியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in