மாணவர் தற்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவும் எதிர்ப்பு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அகிலனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அகிலனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

Updated on: 
1 min read

கோவை: கோவை​யில் பள்ளி மாணவர் தற்​கொலை வழக்​கில், தொடர்​புடைய அனைவரை​யும் கைது செய்ய வலியுறுத்தி, குடும்​பத்​தினர், உறவினர்​கள் ஆட்சி​யர் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்டு போராட்​டம் நடத்​தினர்.

கோவை பீளமேட்​டில் உள்ள அரசு உதவி பெறும் பள்​ளி​யில் பிளஸ் 1 படித்​து​வந்த மாணவர் அகிலன் கடந்த 21-ம் தேதி வீட்​டில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார். பள்​ளி​யில் சாதிய கண்​ணோட்​டத்​தி்ல் தலைமை ஆசி​ரியர் அருண்​குமார், ஆசி​ரியர் விஜயகுமார் மற்​றும் சக மாணவர்​கள் இரு​வர் அணுகிய​தால் அவர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டது தெரிய​வந்​தது.

இது​தொடர்​பாக, மாணவரின் தாய் கெளசல்​யாதேவி அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசி​ரியர் அருண்​குமார், ஆசி​ரியர் விஜயகுமார் மற்​றும் 2 மாணவர்​கள் மீது பீளமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரிக்​கின்​றனர். ஆசி​ரியர் விஜயகுமார் கைது செய்​யப்​பட்​ட​தாக முதலில் போலீ​ஸார் தெரி​வித்​தனர். ஆனால் அவர் கைது செய்​யப்​பட​வில்லை என்​பதே அறிந்த அகிலனின் குடும்​பத்​தினர், உறவினர்​கள், மாவட்ட ஆட்சி​யர் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்​டனர். ஆட்​சி​யரை சந்​தித்து மனு அளித்​தனர்.

இச்​சம்​பவத்​தில் தொடர்​புடைய அனைவரை​யும் கைது செய்ய வேண்​டும், அது​வரை அகிலனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்​டோம் எனக்​கூறி ஆட்சி​யர் அலு​வல​கத்​தில் காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர், போலீ​ஸாரின் உறுதி​மொழியை ஏற்று மாலை​யில் கலைந்து சென்​றனர்.

இதற்​கிடையே, 16 வயதுடைய சக மாணவர்​கள் இரு​வரை போலீஸார் நேற்று கைது செய்​தனர். பள்ளி தலைமை ஆசி​ரியர் அருண்​குமார், ஆசி​ரியர் விஜயகுமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

புகாருக்​குள்​ளான தலைமை ஆசி​ரியர் அருண்​குமார், ஆசி​ரியர் விஜயகுமார் ஆகியோரை பணி​யிடை நீக்​கம் செய்து பள்ளி நிர்​வாகத்​தினர் நேற்று உத்​தர​விட்​டுள்​ளனர்.

<div class="paragraphs"><p>கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அகிலனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்</p></div>
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in