அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வீட்டின் முன்பு அக்.6-ல் போராட்டம்: நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் அறிவிப்பு

‘நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக குளறுபடி’
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Updated on: 
1 min read

விருதுநகர்: நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக குளறுபடிகளை கண்டித்து அக்டோபர் 6-ஆம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வீட்டின் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து கூறுகையில், “நெடுஞ்சாலைத் துறையில் கடந்த 4 மாதங்களாக நிர்வாக குளறுபடிகள் நீடித்து வருகிறது. உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர்கள் பணியிட மாறுதல் வெளிப்படையாக நடைபெறாமல் உள்ளது. ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் இன்று வரை பணியிட மாறுதல் செய்யப்படவில்லை.

மேலும், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்க வேண்டிய பதவி உயர்வுகள் பல்வேறு பணிநிலை அலுவலர்களுக்கு உரிய காலத்தில் இன்று வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. நெடுஞ்சாலைத் துறை மறு சீரமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை.

மேலும், நெடுஞ்சாலைத் துறைக்கு இருக்கும் சொந்த அலுவலகங்களை பயன்படுத்துவதற்கு போதிய தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.

புதிய சாலை மற்றும் பாலப் பணிகள் சம்பந்தமாக மதிப்பீடுகள் தயார் செய்வதற்கு உரிய செலவினங்களை உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர்கள் எந்த அடிப்படையில் பெற வேண்டும் என்ற நிர்வாக உத்தரவுகள் இல்லை.

இதனால் பல ஆயிரங்கள் செலவு செய்த உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் சொல்ல முடியாத நிலையில் மன உளைச்சலில் பணியாற்றி வருகிறார்கள்.

தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவதில் அதிகமான காலதாமதம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளை களைய வலியுறுத்தி 'தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்' சங்கம் சார்பாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வீட்டின் முன்பு அக்டோபர் 6-ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p></div>
“அரசியல் எதிர்காலம் வேண்டுமென நினைப்பவர்கள் திமுக, அதிமுகவில் பயணிக்க மாட்டார்கள்” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in