'டேப்ஸ்' திட்டம்: நிதித் துறை அறிவிப்பை வாபஸ் பெறக் கோரி போராட்டம்

அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

Updated on: 
1 min read

சென்னை: 'டேப்ஸ்' திட்டத்தில் குறைந்த அளவு இடைக்கால ஓய்வூதியம் நிர்ணயித்து நிதித் துறை வெளிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறக் கோரி அரசு கல்லூரி ஆசிரியர்கள் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கான (டேப்ஸ்) முழு விதிகள் வெளியிடப்படும் வரை, ஓய்வு பெறும் மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் இடைக்கால ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் ,18 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிபுரிபவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் ரூ.10,000 மற்றும் அகவிலைப்படி மட்டுமே என கடந்த செப்டம்பர் 11-ம் தேதி நிதித் துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அரசு, ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அனைவருக்கும் இடைக்கால ஓய்வூதியம் ரூ.10,000 மற்றும் அகவிலைப்படி மட்டுமே என நிதித்துறை வெளியிட்ட கடிதத்தை உடன் திரும்பப் பெறவும், காலம் தாழ்த்தாமல டேப்ஸ் திட்டத்துக்கான முழு விதிகளையும் உடனடியாக வெளியிடக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் வாயில் முன்பும் அக்.15-ம் தேதி முழக்கப் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கல்லூரிகளிலும் வாயில் முழக்கப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நடந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் சோ. சுரேஷ் கூறும்போது, “அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கேற்ப பணியாற்றி ஆண்டுகளுக்கு தகுந்தாற்போல அவர்களின் சிபிஎஸ் கணக்கில் ரூ.10 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை இருக்கிறது.

அதாவது அடிப்படை ஊழியர்களுக்கு சுமார் ரூ.10 லட்சம், கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ. 70 லட்சம் என கணக்கில் இருக்கும் போது அனைவருக்கும் இடைக்கால ஓய்வூதியம ரூ.10,000 மற்றும் அகவிலைப்படி மட்டுமே என அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? நிதித் துறையின் அறிவிப்பால் அரசு கல்லூரி ஆசிரியர்கள மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிதித் துறை வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறக் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கல்லூரிகளில் வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இதில் 3500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக, அரசு ஊழியர், மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் இணைந்து கூட்டு போராட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்</p></div>
அப்துல் கலாம் பிறந்தநாள்: ராமேசுவரம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in