மேகமலையில் இருந்து வனகிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேகமலையில் இருந்து வனகிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

வருசநாடு: புலிகள் காப்பகம் என்ற பெயரில் மேகமலை, வருசநாடு பகுதி வனகிராம மக்களை வெளியேற்ற கூடாது என்று கூறி மயிலாடும்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்கு உட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பல தலைமுறையாக வசித்து வருகின்றனர். இங்கு இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட மலைகிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற வனத்துறை நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. மேலும் உச்ச நீதிமன்றம் மூலமும் தொடர்ந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனைக் கண்டித்து இன்று (ஆக.5) மயிலாடும்பாறை கிராமத்தில் பாஜக மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகிக்க ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், மாவட்டச் செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மலைச்சாமி, கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் தெய்வம் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை வலியுறுத்திப் கோஷங்களை எழுப்பினர்.

2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் படி மலைகிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மலைக் கிராமங்களை விட்டு பொதுமக்களை வெளியேற்றக் கடாது. தமிழக அரசு சீர் ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் ராஜா, மாவட்டத் தலைவர் பிச்சை, தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் தெய்வேந்திரன் வனக்குழு தலைவர் செந்தில், தென்னை விவசாய நலச்சங்கம் தலைவர் சுருளிமுருகன், முன்னாள் ராணுவ வீரர் முத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேகமலையில் இருந்து வனகிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
“வெற்றித் தமிழகம் உறுதி” - தவெக அரசின் பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in